CEB | Visit Our Power Plants

NCRE இற்கு அறிமுகம் மேலதிக தகவல்களிற்கு

இலங்கையில் சம்பிரதாயபூர்வமல்லாத மீள்புதுப்பிக்கதக்க சக்தித்துறை (NCRE) SECTOR அபிவருத்தி

வரலாறு

தற்போது எமது நாட்டில் மின்னுற்பத்தி ஆற்றல் கொண்டுள்ள முக்கியமான தேசிய மின்சக்தி நீர் மின் சக்தி என்பதனால், நீர் மின் உற்பத்திக்கு நாட்டில் காணப்படுகின்ற ஆற்றல் உச்சநிலை வரை அபிவிருத்தி செய்யப்படல் வேண்டுமென இலங்கை மின்சாரத் துறைக்கான அரச கொள்கை எதிர்பார்க்கின்றது.  இந்தக் கொள்கையின் கீழ் அனைத்து பாரிய  அளவிலான நீர் மின் மின்னுற்பத்தி நிலையங்களும் எதிர்காலத்தில் அரச நிர்வாகத்தின் கீழ் இருக்கவுள்ளது.  தனியார்துறையின் முதலீடானது சிறிய நீர் மின் நிலையங்கள் மூலமாக மின்னுற்பத்தி மேற்கொள்ளப் பயன்படுத்தப்படும்.

இலங்கை மின்சார சபையின் ஒத்துழைப்பு சிறிய நீர் மின்னுற்பத்தி நிலைய அபிவிருத்திக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டது. இலங்கை மின்சார சபை, மீள்புதுப்பிக்கதக்க சக்தி வகைகளினால் மின்சாரத்தினை உற்பத்தி செய்தலை 1990 காலப்பகுதியின் ஆரம்ப காலப்பகுதியிலிருந்தே தனியார் துறையினருக்குப் பயிற்சி வழங்குதல், திறன் அபிவிருத்தி நடவடிக்கைகள், ஆரம்ப ஆய்வுக் கற்கைகள் மற்றும் வளங்களை மதிப்பிடல் உள்ளிட்ட தேவையான ஒத்தாசைகளை  வழங்கி ஊக்கப்படுத்தியது.

1997 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இ.மி.ச யினால் சிறிய மீள்புதுப்பிக்கதக்க சக்தி உற்பத்தியாளர்களிடமிருந்து மின்சரத்தினை (SPPs) கொள்வனவு செய்யும் முறை முறைப்படுத்தப்பட்டது. இதற்காக தவிர்க்கப்பட்ட செலவுக் கொள்கையை  (avioded cost) அடிப்படையாகக் கொண்டு மின்சக்தியினை கொள்வனவு செய்யும் தொகை மதிப்பிடும் முறைமையை உள்ளடக்கிய மின்சக்தி கொள்வனவிற்கான நியம ஒப்பந்தம் (SPPA) வெளியிடப்பட்டது. இது 10 MW இற்குக் குறைந்த கொள்ளளவு கொண்ட  மின்னுற்பத்தி நிலையங்கள் அனைத்திற்கும் வழங்கப்பட்டது. (தவிர்க்கப்பட்ட செலவுக் கொள்கை - avioded cost என்பது மின் நிலையம் ஒன்றின் நிர்மாணத்திற்குப் பதிலாக மூன்றாம் தரப்பினர் ஒருவரிடமிருந்து  மின்சாரத்தினை கொள்வனவு செய்தல் மூலம் இ.மி.ச இனால் தவிர்த்துக்கொள்ளப்படும் செலவாகும்.)

அதன் பின்னர், இலங்கை அரசினால் கூடிய உற்பத்திச்செலவு கொண்ட அனல் மின் உற்பத்தியிலிருந்து இலங்கை மின்னுற்பத்தியினை பல்வகைப்படுத்தும் செயற்பாட்டுக் கொள்கைக்கமைய மீள்புதுப்பிக்கதக்க சக்தி திட்டங்களின் அபிவிருத்தி இனம் காணப்பட்டது. இதனால், மீள்புதுப்பிக்கதக்க சக்தி வகைகளின் (சிறிய நீர் மின்சக்தி, காற்று, உயிரினத்தொகுதி (biomass)) அபிவிருத்திக்கெனத் தேவைப்படும் ஊக்குவிப்புத்தொகை மற்றும் உதவிகள் வழங்கப்பட்டன.  அதே போன்று, மேலதிகமாக, தேசிய சக்திக் கொள்கை 2006, மின்னுற்பத்தியில் மூலப்பொருட்களின் பல்வகை மற்றும்  சக்திப் பாதுகாப்பு என்பவற்றினை மூலோபாய கருதுகோள்களாக அடையாளப்படுத்தி, மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்களின் அபிவிருத்தியினை மூலோபாயங்களில் ஒன்றாக இனம் கண்டுள்ளது. மேற்குறித்தவற்றினைக்  கருத்திற் கொண்டு, தவிர்க்கப்பட்ட செலவு அடிப்படை அறவீட்டுக்குப் பதிலாக 2007ஆம் ஆண்டு முதல் செலவு அடிப்படை, தொழில்நுட்பரீதியான, மூன்று அடுக்கு அறவீட்டினை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  இலங்கையில் மீள்புதுப்பிக்கதக்க சக்தி அபிவிருத்தி தொடர்பாக மேலதிக விபரங்களுக்கு சம்பிரதாயபூர்வமற்ற மீள்புதுப்பிக்கதக்க சக்தித்துறையின் தற்போதைய நிலைமையினை பார்க்கலாம்
 

 

NCRE Tariff Announcement (2022)

Click here to download the NCRE Tariff Announcement (2022) as a PDF.

வெற்றிக்கான முக்கிய விடயங்கள்

RERED திட்டம் மூலமக நீண்டகால நிதிச்சலுகை

மீள்புதுப்பிக்கதக்க சக்தி மின்னுற்பத்தி துறையின் அபிவிருத்தியினை துரிதப்படுத்துவதற்கும் சம்பிரதாயபூர்வமல்லாத மீள்புதுப்பிக்கதக்க மின் சக்திப் பாவனையினை ஒன்று சேர்ப்பதனை நோக்கமாகக் கொண்டும் அரச பொறுப்புக்கூறலின் ஒரு பகுதியாக, இலங்கை அரசாங்கம் உலக வங்கி மற்றும் “உலகளாவிய சுற்றாடல் வசதி” (GEF) ஆகியவற்றின் ஒத்துழைப்பு வழங்கப்பட்ட கிராமிய பொருளாதார அபிவிருத்திக்கான மீள்புதுப்பிக்கதக்க சக்தி திட்டத்தினை (RERED) அங்கீகரித்தது.

அரசாஙகமானது RERED  திட்டம் ஊடாக, கிராம பொருளாதார அபிவிருத்திக்கென உதவி வழங்குவதனயும்  மின்சக்தியினை வழங்குவதன் மூலம் கிராம மக்களின் வாழ்வுத்தரத்தினை உயர்த்துவதனையும், குறைந்த முதலீட்டில் சிறிய  நீர் மின் திட்டங்களுக்கென நிதியுதவியினை வியாபிக்கவும் நோக்காகக் கொண்டுள்ளது.

RERED திட்டத்தினை செயற்படுத்தும் நிறுவனமானது நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சாகும்.  திட்டம் செயற்படுத்தப்படல், ஒருங்கிணைப்பு மற்றும் முகாமைத்துவம் DFCC வங்கியில்  அமைக்கப்பட்டுள்ள நிர்வாக அலகின் பொறுப்பாகும்.
 

 

மின்சக்தி கொள்வனவிற்கான நியம ஒப்பந்தத்தின்  (SPPA) நல்ல அம்சங்கள்

உலக வங்கியின் அனுசரனையுடன் மின்சக்தி கொள்வனவிற்கான நியம ஒப்பந்தத்தின்  (SPPA) அபிவிருத்தி செய்யப்பட்டதுடன்,  ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்கள் மற்றும் நிபந்தனைகள் என்பவற்றுடன் வரைவு செய்யப்பட்டது. உரிய வசதி மூலம் உற்பத்தி செய்யப்படுகின்ற சக்தி இ.மி.ச யினால் விலைக்குப் கொள்வனவு செய்யப்படுவதுடன் சக்தி வழங்கப்படாமைக்கு தண்டப்பணம் அறவிடப்படமாட்டாது.

 

கீழ்க்கானும் மின்சக்தி  மூலங்கள் சம்பிரதாயபூர்வமற்ற சக்தி மூலங்களாகக் கொள்ளப்படும்.

    நீர் மின்சக்தி (சிறிய நீர் மின் சக்தி)
    காற்று சக்தி
    உயிரினத்தொகுதி (biomass) (மரத்துகள்கள்) சக்தி
    விவசாய மற்றும் கைத்தொழில் கழிவுச் சக்தி
    மாநகர சபை கழிவுகள்
    கழிவு அனல் மின் சக்தி
    கடலலைச் சக்தி
    சூரிய சக்தி

 


For More Information

மின்னஞ்சல் முகவரி - [email protected]

தொலை பேசி - (+94) 11-2344775

தொலை நகல் - (+94) 11-2344774

இணைய தளம் முகவரி - www.ceb.lk

முகவரி -

மின் சக்தி கொள்வனவுக் கிளை, மின் பரிமாற்றல் பிரிவு, இலங்கை மின்சார சபை, 6 ஆம் மாடி, இல. 50, சிற்றம்பலம் எ காடினர் மாவத்தை, த. பெ. 540, கொழும்பு - 02