இலங்கை மின்சார சபையில் பதிவு செய்துகொண்ட தனியார் ஒப்பந்ததாரர்களிடமிருந்து மேற்குறித்த சேவைகள் பெறப்படுகின்றது. எனவே எமக்கு சேவை வழங்குவதற்கு ஆர்வமுள்ளவர்கள் சேவை வழங்கும் ஒப்பந்ததாரராக இலங்கை மின்சார சபையில் பதிவு செய்து கொண்டிருத்தல் தேவையானதாகும்.
அனைத்து இ.மி.ச மாகாண அலுவலகங்களிலும் இந்த சேவைகளுக்கென பொதுவாக வருடாந்த அடிப்படையில் ஒப்பந்ததாரர்கள் பதிவு செய்யப்படுவார்கள். ஒப்பந்ததாரர்கள் பதிவுக்கென அழைக்கப்படும் நடவடிக்கை தேசிய நாளிதழ்களில் அறிவித்தல் பிரசுரிக்கப்படுதல் மூலமாக ஆரம்பிக்கப்படும். அவ்வாறு அனைத்து வருட இறுதி பகுதியில் (ஆகஸ்ட், செப்ரெம்பர் மாதங்களில் இருந்து) இந்த செயற்பாடுகளுக்காக ஒப்பந்ததாரர்களை பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவித்தல் தேசிய நாளிதழ்களில் பிரசுரிக்கப்படும். இது தொடர்பாக ஆர்வமுள்ளவர்கள், அறிவித்தல் தொடர்பாக மாகாண அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளகூடிய விலைமனு கோரும் ஆவணத்தினை கோரப்பட்டுள்ள விபரங்களை முன் வைக்கலாம்.
இலங்கை மின்சார சபைக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றதன் பின்னர், அந்த விபரங்கள் மூலப் பிரதிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டு உரிய தரத்தினர்களை நேர்முகப் பரீட்சையொன்றுக்கு உட்படுத்தி மதிப்பீடு ஒன்றுக்கு உள்ளாக்கப்படும். அதே போன்று தெரிவு செய்யும் செயற்பாடு மேற்கொள்ளப்படுவது புள்ளிகள் வழங்கப்படும் முறைமை ஒன்றின் மூலமாகும்.
தேவைப்படும் ஒப்பந்ததாரர்களின் தொகைக்கு ஏற்ப மற்றும் விண்ணப்பிக்கின்ற ஒப்பந்ததாரர்களின் தொகைக்கு ஏற்ப ( இலங்கை மின்சார சபையின் தேவைப்பாட்டினை பூர்த்தி செய்யக் கூடிய) இறுதித் தெரிவு இடம் பெறும். தெரிவு செய்யப்படுபவர்கள் ஒப்பந்ததாரர்களாக பதிவு செய்து கொள்ளப்படுவர். ஒப்பந்ததாரர்கள் பதிவுக்கான பத்திரிகை அறிவித்தல் பிரசுரிக்கப்படும் காலம் பற்றிய தகவல் உரிய மாகாண அலுவலக பிரதம பொறியியலாளர் (வாணிப) அவர்களைத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.