CEB | New Customer

புதிய நுகர்வாளர்களுக்கு கட்டணம் செலுத்துமுறை தொடர்பான அறிவுறுத்தல்கள்

மின் பட்டியலினைக் கூடிய விரைவில் செலுத்துவதன் மூலம் தயவு செய்து எமக்கு உதவி செய்யுங்கள்.

கொடுப்பனவின் போது மின் பட்டியலானது “தயவு செய்து கிழிக்காதீர்கள்” என்ற கூற்றுடன் இணைந்ததாக இருத்தல் வேண்டும். வேறுபடுத்தப்படுத்தப்படும் பகுதியை மட்டும் சமர்ப்பித்து கொடுப்பனவு மேற்கொள்ளும் போது பிழையானதொரு கணக்கில் வைப்புச் செய்யப்படின் இலங்கை மின்சார சபை எவ்விதமான பொறுப்புக்களையும் ஏற்றுக்கொள்ள மாட்டாது. இது உங்கள் மின் துண்டிக்கப்படுவதற்கும் ஏதுவாகலாம்.

பணமாகச் செலுத்தும் முறை

கீழக்காணும் விற்பனைக் கரும பீடங்களில் (POS) பணம், காசோலை அல்லது வங்கி வரைவு ஒன்றின் மூலமாகக் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படலாம்.

கீழ்க்காணும் இடங்களில் பணமாகக் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படலாம்.

மக்கள் வங்கி, இலங்கை வங்கி, ஹற்றன் நஷனல் வங்கி, கொமர்சல் வங்கி,  செலான் வங்கி, எச்எஸ்பிசி வங்கி, யூனியன் வங்கி, கிராம அபிவிருத்தி வங்கி, தேசிய சேமிப்பு வங்கி. நாடு முழுவதுமுள்ள தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்கள்.

கார்கில்ஸ் சுப்பர் மார்கெட்

சிங்கர், அபான்ஸ் விற்பனை நிலையங்கள்

இந்த இணைய தளம் ஊடாகவும் கொடுப்பனவுகள் 

 இந்த இணைய தளம் ஊடாகவும் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படலாம். சம்பத் நெட் மற்றும் மக்கள் ஸ்மார்ட் கணக்கு.

காசோலையாகச் செலுத்தும் முறை

காசோலைகள் அனைத்தும் “ பொதுமுகாமையாளர் - இலங்கை மின்சார சபை” எனும் பெயரில் வரையப்பட்டு குறுக்குக் கோடிடப்பட்டும், மக்கள்  வங்கியின்  இலங்கை மின்சார சபை கணக்கிற்கு கொடுப்பனவு செய்யப்படக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.

மின்பட்டியலில் காசோலை இலக்கம் குறிப்பிடப்படல் வேண்டும். காசோலையின் பின் புறத்தில் மின் கணக்கு இலக்கம் எழுதப்பட்டிருத்தல் வேண்டும்.

காசோலை ஒன்று புறக்கணிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ள மறுக்கப்படுமெனின் எவ்விதமான முன்னறிவித்தல்களும் இல்லாது மின் துண்டிக்கப்படலாம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் மொத்த நிலுவைகளும் பணமாக செலுத்தப்பட வேண்டும்.

செலுத்தப்படாத நிலுவைகள்

நிலுவைகள் அனைத்தும் மின் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள காலப் பகுதிக்குள் செலுத்தப்படாதவிடத்து உங்கள் மின் இணைப்பினை துண்டிக்குமாறு கட்டளை ஒன்று விநியோகம் செய்யப்படும்.  மின்சாரம் மீள் வழங்கப்படும் பொழுது செயற்படுத்தல் கட்டணம் மற்றும் நிலுவைத் தொகைக்கான வட்டி உள்ளடங்கலான குறிப்பிடத்தக்க மேலதிகக் கட்டணம் ஒன்றினைச்  செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படலாம்.

நிலுவைகள் 30 நாட்களுக்குள் செலுத்தப்படவில்லை எனின் 2008. 10. 24 ஆம் திகதி கொண்ட 1527/25 ஆம் இலக்க (அதி விசேட) அரசாங்க வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக கணக்கு நிலுவை மீது 2%  மாதாந்த வட்டித்தொகை சேர்க்கப்படும். 

மின் பட்டியல், கொடுப்பனவு மற்றும் சேவை இணைப்பு தொடர்பான அனைத்து தெளிவுபடுத்தல்களும் மின் பட்டியல் விநியோகம் செய்யப்பட்டு 14 நாட்களுக்குள் உங்கள் பிரதேசப் பொறியியலாளரிடம் இருந்து அறிந் துகொள்ளப்பட வேண்டும்