CEB | FAQ

அடிக்கடி கேளுங்கள் கேள்விகள்


மின்னுற்பத்தி

உண்மையாகவே நீங்கள் மின் நிலையம் ஒன்றிற்கு அண்மையாக இருப்பினும் இந்தக் கேள்விக்கு விடை வழங்க முடியாது. ஏனெனின் அது கடல் முகத்துவாரத்திற்கு அண்மையாக இருந்து ஒரு வாளி நீர் எடுத்து, எந்த ஆற்றிலிருந்து இது  வந்தது என்று சிந்திப்பது போன்றாகும்.


எல்லா மின்னுற்பத்தி நிலையங்களும் மின்சக்தியை உற்பத்தி செய்து ‘தேசிய மின் தொகுதி’ என்றழைக்கப்படுகின்ற வலை போன்ற ஒரு கட்டமைப்பிற்கு செலுத்துகின்றது. தேசிய மின் தொகுதிக்கான இவ் உள்ளக இணைப்பானது உயர்மின்னழுத்த (இலங்கையில் 220 kV அல்லது 132kV )மின்பரிமாற்ற மார்க்கங்களாகும். அவை நாட்டில் இருக்கின்ற அனைத்து மின்னுற்பத்தி நிலையங்களையும் இணைக்கின்றது. உங்கள் பிரயாணத்தின் வீதிமருங்குகளில் காணப்படுகின்ற உயர்ந்த உருக்கிரும்பினாலான கோபுரங்களிலமைந்த மின்மார்க்கங்களே இவ் இணைப்புகளாகும். தேசிய மின் தொகுதியின் சில புள்ளிகள் உபமின் நிலையங்கள் என்றழைக்கப்படுகின்றன. இங்கு உயர் அழுத்த மின் சக்தியானது குறைந்த அழுத்தத்திற்கு பயன்பாட்டிற்கேற்றவாறு மாற்றம் செய்யப்பட்டு அனைவரினதும் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படுகின்றது. உயர் அழுத்தத்திலிருந்து குறைந்த அழுத்தத்திற்கான மாற்றமானது பல படிகளில் நடைபெறுகிறது. எனவே தேசிய மின்சக்தித் தொகுதியுடன் தொடர்பு

கொண்டிருக்கும் அனைத்து மின்னுற்பத்தி நிலையங்களும் ஒன்றுடன் ஒன்று உள்ளகத் தொடர்பு கொண்டிருப்பதன் காரணத்தினால்  உங்களுக்கு கிடைக்கும் மின்சாரம் எந்த மின்னுற்பத்தி நிலையத்திலிருந்து பெறப்படுகிறது என்பதனை குறிப்பிட்டு கூறமுடியாது. இருப்பினும் கடல் முகத்துவாரத்திற்கு அண்மையாக இருந்து ஒரு வாளி நீர் எடுப்பது போன்ற உதாரணம் போன்றே நீங்கள் மின்னுற்பத்தி நிலையம் ஒன்றுக்கு அண்மையில் வசிப்பவராயின் உங்கள் வீட்டிற்கு வரும் மின்சாரத்தின் கூடிய பகுதி அண்மையில் உள்ள மின் நிலையத்திலிருந்து கிடைப்பதாக இருக்கலாம் என்று எமக்குக் கூறக் கூடியதாக இருக்கும்.


மின் பரிமாற்றல்

நாம் அனைவரும் அடிப்படை விஞ்ஞானத்தில் கற்றிருப்பது போன்று மின்சாரம் என்பது சக்தியின் ஒரு வடிவமாகும்.  அதனை ஆக்கவோ அழிக்கவோ முடியாது.  மேலும் ஆடலோட்ட மின்சாரத்தினைக் களஞ்சியப்படுத்தி வைக்கவும் முடியாது.  இதனால் மின் நுகர்வாளர் ஒருவருக்கு குறிப்பிட்ட காலப்பகுதியில் தேவைப்படுகின்ற அளவு மின்சாரத்தினை அந்நிகழ் நேரத்தில் உற்பத்தி செய்து வழங்க வேண்டியுள்ளது.  வேறு விதமாகத் தெளிவு படுத்துவதுதெனின் மின் சக்திகான கேள்வி மற்றும் வழங்கல் (Supply & demand) ஆகிய இரண்டும் எந் த நிகழ்நிலை நேரத்திலும் சமனாக இருக்க வேண்டும்.


இச் சமப்படுத்தல் செயற்பாடானது மின் விநியோகத்தின் அதிர்வெண்ணை  (frequency) (இலங்கையில் 50Hz) வழி காட்டியாக கருதுவதனாலாகும். உதாரணமாக உங்களைப் போன்ற நுகர்வாளர் ஒருவரிற்கு ஒரு நொடி பொழுதிற்கு  1,000 MJ மின் சக்தி   தேவைப்படுகிறதெனின் (ஒரு செக்கனுக்கு 1,000 MJ கேள்வி, 1000MW இற்குச் சமனாகும்.) இலங்கை மின்சார சபையினால் சரியாக 1000 MW மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.  நுகர்வாளரின் கேள்விக்குச் சமனான மின் வழங்கலை மேற்கொள்ளும் போது மின் வழங்கலானது சமநிலையில் காணப்படுகின்றது. உங்கள் கேள்வியிலும் மின் வழங்கலானது அதிகம் எனின், அதிர்வெண்ணானது 50Hz இனை விடவும் அதிகரிக்கும், குறைவு எனின் அதிர்வெண்ணானது 50Hz இனை விடவும் குறையும்.

ஒரு சில அவசர சந்தர்ப்பங்களில் எமது மின்னுற்பத்தி நிலையங்கள் செயற்படாது போகும் (தானாகவே துண்டிக்கப்படும் அல்லது செயலிழக்கும்).  பெரிய அளவிலான மின்னுற்பத்தி நிலையம் ஒன்று (100MW கொள்திறுடையது எனக் கொள்வோம்) திடீரென செயற்படாது விடின், கேள்வி - வழங்கல் சமனிலைச் செயற்பாட்டிற்கு பாதிப்பு ஏற்படும். இதன்போது, உதாரணமாக நுகர்வாளர்களின் கேள்வி 1000 MW ஆக இருந்தபோதிலும் எமது வழங்கலானது 900 MW ஆக குறைவடையும். இதன் விளைவாக மின்சாரம் வழங்கலின் அதிர்வெண்ணானது உரிய அளவை விடவும் குறைவடையும். ( ஏன் அவ்வாறு நடக்கின்றது ? அவ்வாறான சந்தர்ப்பங்களில் கேள்வி வழங்கல் சமன்பாட்டினை சீராக்கம் செய்வது யார் என்பது நீண்ட பதில் கொண்ட விடயாமகும். ) இதன்போது தொகுதியினை செயற்படுத்திக் கொண்டிருக்கின்ற  பொறியியலாளர், மிகவும் துரிதமாகச் செயற்பட்டு குறைவடைந்த 100MW மின்சக்தியினை உடன் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு எனினும் அதற்குச் சிறிது கால அவகாசம் தேவையானதாகும்.  மீண்டும் கேள்வி வழங்கல் சமனிலை ஏற்படும் வரை மின் வழங்கலின் அதிர்வெண்ணானது 50Hz அளவை விடவும் குறைவடைந்து செல்லும்.

மின்னுற்பத்தி நிலையமானது, நியம அதிர்வெண்ணிற்கு குறைந்த அதிர்வெண்ணில் செயற்படுவது அதன் கட்டமைப்பிற்கு பாதகமானதாகும்.  உதாரணமாக, எமது நாட்டின் தேசிய மின் தொகுதியில் இணைக்கப்பட்டுள்ள மின்னுற்பத்தி நிலையங்கள் பெரும்பாலானவை, 47Hz அதிர்வெண்ணிற்கு குறைவான அளவில் தொழிற்பட முடியாதவைகளாகும். எனவே தேசிய மின் தொகுதி குறைந்த அதிர்வெண் அளவில் தொடர்ந்து தொழிற்பட இடமளிப்பின், ஒரு குறிப்பிட்ட நேரத்தின் பின்னர், தொழிற்பாட்டிலுள்ள ஏனைய மின்னுற்பத்தி நிலையங்களும் செயலிழக்கத் தொடங்கும் என்பதுடன் அதன் காரணமாக மின் பற்றாக்குறை மேலும் மேலும் அதிகரிக்கும். இவ்வாறான செயலிழப்பு, தொகுதி முழுவதும் செயலிழக்கக் கூடிய நிலைமையை தீவிரமாக்கம்.

ஆயினும், பாதகமான நிலைமைகள் உருவாகும் சந்தர்ப்பங்களில், கேள்வி - வழங்கல் சமனிலையை மீளக்கொண்டு வருதலுக்குரிய  தன்னியக்க பொறிமுறை மற்றும் தொகுதியினை நடாத்திச் செல்பவர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளும் காணப்படுவதனால், எல்லா மின்னுற்பத்தி நிலையங்களின் செயல் இழப்புக்களும், மொத்த தொகுதி செயல் இழப்பாக மாட்டாது. 
 


மின் நுகர்வு

நாளொன்றின் உச்ச கேள்வி நிலவுகின்ற காலப்பகுதியில் சேமிக்கபபடுகின்ற மின் அலகு, ஏனைய நேரங்களில் சேமிக்கபபடுகின்ற மின் அலகு ஒன்றினை விடவும் கூடுதலான சேமிப்பினை ஏற்படுத்தும்.  மேலே கேள்வி இல. 02  இல் விபரிக்கப்பட்டுள்ளவாறு,  வாரத்தில் 07 நாட்களும் 24 மணி நேரமும், நுகர்வாளர்களின்  தேவைக்கு சமனான வழங்கலை இ.மி.ச யினால் மேற்கொள்ள வேண்டியுள்ளது.  நள்ளிரவில் மற்றும் அதிகாலை நேரத்தில் நாட்டின்  மின்சாரத்திற்கான கேள்வி மிகவும் குறைவாகும்.  அதிகாலை 2.00 மணியளவில், நாளொன்றின் மின்சாரத்திற்கான கேள்வி மிகக்குறைந்த பெறுமானத்திற்கு வீழ்ச்சியடையும். இது அவ்வாறெ னினும் பகல் நேரத்தில் சற்றுக்கூடுதலாகவும், இரவு 7.00 மணியளவில் மின்சாரத்திற்கான கேள்வி உச்சமடைகின்றது. இது இரவுநேர உச்சக் கேள்வி (Night Peak) எனப்படும்.

 

நுகர்வாளர்களின் மின்கேள்விக்கு ஏற்ப அவ்வப்போது மின்னுற்பத்தியினை மாற்றம் செய்து, நுகர்வுக் சமனான மின் வழங்கலினை மேற்கொள்ள தேவையான உற்பத்தியினை இ.மி.ச பின்பற்ற வேண்டியுள்ளது. அதிகாலை மற்றும் பகல் நேரங்களில், மின்கேள்வியானது ஒருங்கிணைக்கப்படக்கூடிய மின்னுற்பத்தி திறனிலும் அதாவது இ.மி.ச யின் நிர்மாணிக்கப்பட்டுள்ள மின்னுற்பத்தி கொள்ளளவிலும் குறைவாகக் காணப்படுகின்றமையினால், இ.மி.ச யிடம் பல்வேறு மின்னுற்பத்தி தெரிவுகள் காணப்படுகின்றன. இதனால், செலவு கூடிய மின்னுற்பத்தி முறையினை செயற்படுத்துவதிலும், செலவு குறைந்த முறையினைத் தெரிவு செய்து மின்னுற்பத்தியினை மேற்கொள்ள முடியும். இ.மி.ச யின் மின்னுற்பத்தியானது, செலவு குறைந்த உற்பத்தி முறைமையில் ஆரம்பித்து, அதிகரிக்கும் மின்கேள்விக்கு ஏற்ப, செலவு கூடிய மின்னுற்பத்தி முறைமையினை இணைப்பதனூடாக மேற்கொள்ளப்படுகிறது.  இம்முறையினை தகுதிவாய்ந்த வரிசையில் இணைத்தல் (Merit Order Dispatch) என குறிப்பிடுகின்றோம். மின்கேள்வி குறையும் பொழுது இச்செயற்பாடானது எதிர்மாறாக இடம் பெறும். அதாவது மின்சாரத்திற்கான கேள்வி குறைவடையும் போது, செலவு கூடிய மின்னுற்பத்தி நிலையங்களிலிருந்து மின் பெறப்படுவதனை நிறுத்துவதலிருந்து ஆரம்பித்து தேவைக்கேற்ப குறைத்துக்கொள்ளப்படும்

 

இரவு நேரங்களில், கூடுதலான மின்கேள்வி காணப்படும் போது, கூடுதல் செலவு கொண்ட  வாயு விசையாழி மின்னுற்பத்திபிரிவு (Gas Turbine Units) உள்ளிட்ட, இ.மி.ச யிடமுள்ள  அனைத்து மின்னுற்பத்தி நிலையங்களையும் செயற்படுத்துகிறது. வாயு விசையாழி மின்னுற்பத்திபிரிவு (Gas Turbine Units) மூலம் ஒரு அலகு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதற்கு ஏற்படும் செலவானது, நிலக்கரி மின் நிலையம் ஒன்றினால், மின் அலகு ஒன்றினை உற்பத்தி செய்ய ஏற்படுகின்ற செலவிலும் 10 மடங்குகளாகும். எனவே, இரவு நேரங்களில்  அவசியமற்ற  மின் குமிழ் ஒன்றினை நிறுத்தும் போது, இ.மி.ச யினால் மின்னுற்பத்திச் செலவினை, அந்நேரத்தில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் அதிக விலை கூடிய மின் நிலையத்தின் மின் உற்பத்தியை குறைப்பதன் மூலம் குறைப்பதற்கு  முடியுமாகின்றது. இதன் விளைவாக இரவு நேரங்களில், உங்களால் சேமிக்கப்படும் மின் அலகு ஒன்றினால் நாட்டிற்கு சேமிக்கப்படும் பணமானது, அன்றைய தினத்தின் ஏனைய நேரங்களில்  சேமிக்கப்படும் மின் அலகு ஒன்றினால் சேமிக்கப்படும் பணத்தினை விடவும் அதிகமாகும்.

 

இரவுநேர உச்ச கேள்வியில்  பாவனையை தவிர்க்குமாறு இ.மி.ச நுகர்வாளர்களிடம் கோருவதற்கு மற்றுமொரு காரணம் உண்டு. உச்ச மின் கேள்வி காணப்படுகின்ற இரவு நேரத்தில், இ.மி.ச யினால் செயற்படுத்தப்படும்  மின்னுற்பத்தி  நிலையங்கள் உச்ச நேர அலகுகள் (peaking units) என்றழைக்கப்படுவதுடன் அது நாளொன்றிற்கு ஒரு சில மணித்தியாலங்களே தொழிற்படுகின்றது. ஏனைய நேரங்கள் முழுவதிலும் அது நிறுத்திவைக்கப்பட்டிருக்கும். இதனால் இது ஒரு வகையில் செயலற்ற முதலீடாகும். நுகர்வாளர்கள், இரவு நேரத்தில் உச்ச கேள்வி நிலவும் காலப்பகுதியில் மின் நுகர்வினை குறைப்பதற்கு முயற்சி மேற்க்கோண்டு இ.மி.ச க்கு உதவுவார்களாயின், அது மின்னுற்பத்தியை செலவு கூடிய இயந்திரம் ஒன்றின் மூலம் பெறப்படுவதனை நிறுத்துவதற்கு மட்டுமன்றி, எதிர்காலத்தில் உச்ச நேர அலகுகள் (peaking units) மேற்கொள்ளப்பட இருக்கின்ற முதலீடுகளை தவிர்ப்பதற்கும் உதவியாக இருக்கும்.
 

மின்சக்தியினை kWh இனால் அளவிடுகின்றோம்.  kWh என்பது kW மணித்தியாலம் ஆகும். ஜூல் (J) அல்லது குதிரைவலு (HP) போல  kWh என்பது சக்தியின் அளவை அலகாகும். W என்பது வலுவின் அளவை அலகாகும்.  ஒரு kW என்பது 1000 W களாகும்.  மேலும் ஒரு kWh என்பது 1000 W மணித்தியாலங்களாகும். 

வலு மற்றும் சக்திக்கிடையில் காணப்படும் வித்தியாசத்தினை கீழேயுள்ள ஒப்பீடு மூலம் புரிந்துகொள்ளலாம்.

நீர்த்தாங்கியொன்று 1000 லீற்றர் நீரை கொண்டள்ளதாகக் கருதுவோம். அதில் நீரைப் பெறுவதற்காக, நீர் பாயும் அளவை தேவைக்கேற்ப கூட்டிக் குறைக்க திருகி  ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. அந்தத் திருகியினை முழுமையாகத் திறப்பின், உச்ச வீதத்தில் (ஒவ்வொரு செக்கனுக்கும் 1 லீற்றர்) நீரைப் பெற முடியும்.   நீர்த்தாங்கியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நீரின் கனவளவு (லீற்றரில்) சக்திக்கு (kWh) ஒப்பிடப்படுகிறது. நீர்த்தாங்கியிலிருந்து திருகி வழியாக நீர் எவ்வளவு வீதத்தில் வேகமாக வெளியெடுகப்படுகின்றதோ ( ஒரு செக்கனுக்கு  எத்தனை லீட்டர்) என்பது வலுவுக்கு ஒப்பிடப்படுகிறது (kW). நாம் ஒரு kW  வலுவை ஒரு மணித்தியாலத்திற்கு பெறும் போது உண்மையாக நாம் ஒரு kWh சக்தியை நுகர்கின்றோம்.

எங்களிடம் கூடிய கொள்ளவுடைய திருகி காணப்படுமாயின் ( அல்லது மின்னுற்பத்தி நிலையம்),  ஒரே நேரத்தில் அதிகமான நீரினை வழங்கலாம் (அல்லது மின்சாரத்தினை) அதிகமான நுகர்வாளர்களுக்கு வழங்கலாம். இருப்பினும், அவர்கள் உண்மையாக நுகர்வு செய்வது நீரின் அளவு லீற்றரில் ( அல்லது kWh ல் மின்சாரம்). நீர் பாயும் அளவின் வீதம் (அல்லது வலு) எவ்வளவு வேகமாக அவர்கள் நுகர்கின்றார்கள் அல்லது என்ன வீதத்தில் ஒவ்வொரு செக்கனுக்கும் லீற்றர்களில் நுகர்கின்றார்கள் ( அல்லது kW) என்பதைத் தீர்மாணிக்கின்றது.
 

ஏதேனும் ஒரு காரணத்தினால் மின்மானி வாசிப்பு மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டால், நுகர்வாளர்களின் மின் பாவனை அலகுகள் அடுத்த உயர் அறவீட்டு கட்டத்திற்கு செல்வதனால், வழக்கமான பொதுவான கட்டணத்திற்கு அதிகமான கட்டணம் ஒன்றினை செலுத்த வேண்டிய கட்டாயத்தினை எதிர்நோக்குவதாகவும் அசாதாரணமாகத் தண்டிக்கப்படுவதாகவும் வீட்டு உபயோக நுகர்வாளர்கள் மத்தியில் பிழையான கருத்து காணப்படுகின்றது. கீழே விபரிக்கப்படுகின்றவாறு அந்தக் கருத்து பிழையானதாகும்.

மின்மானி வாசிப்பு மேற்கொள்வதற்காக நுகர்வாளர் ஒருங்கிணைப்பாளர் பொதுவாக 30 நாட்களுக்கு ஒரு முறை எனும் சுற்றில், உரிய இடத்திற்கு வருவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் காரணமாகவே ஒவ்வொரு அறவீட்டு கட்டங்களும் 30 அலகுகளை கொண்டுள்ளது. ஆயினும், எல்லா சந்தர்ப்பங்களிலும் அவ்வாறு 30 நாட்கள் முடிந்தவுடன் நுகர்வாளர் ஒருங்கிணைப்பாளர் மின்மானி வாசிப்பு மேற்கொள்ள வருவது செயல்முறையில் சாத்தியமற்றதாகும். இதனால் நுகர்வாளர் ஒருங்கிணைப்பாளர்களின் வருகையினால் தாமதமாகும் அல்லது முற்படுத்தப்படும் ஒவ்வொரு தினங்களின் எண்ணிக்கையை கருத்தில் கொள்வதற்காக, ஒவ்வொரு அறவீட்டு கட்டமைப்பின் அலகுகளானது, இருவருகைக்கு இடையிலான நாட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கணக்கிடப்படுகின்றது. 

உதாரணமாக, மானி வாசிப்பு இரண்டிற்கிடையேயான இடைவெளி 35 நாட்கள் எனின்,  அறவீட்டின் முதலாம் கட்ட வரையறையானது 30 kWh இலிருந்து 35kWh வரை அதிகரிக்கப்படுகிறது. அறவீட்டின் இரண்டாம் கட்ட வரையறையானது 60 kWh இலிருந்து 70kWh வரை அதிகரிக்கப்படுகிறது. இதே போல் வரையறை அதிகரிக்கப்பானது முன்னும்பின்னும் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் அதிகரிக்கும் அறவீட்டு கட்டமைப்பு முறைமையின் மூலமாக நுகர்வாளர்களுக்கு ஏற்படும் பிரதிகூலங்கள் தடுக்கப்படுகின்றது

இதற்கென மானி வாசிப்பு இரண்டிற்கிடையேயான இடைவெளிக்கேற்ப,  நுகர்வாளர்களிடம் அறவீடு செய்யவேண்டிய சரியான கட்டண விபரங்கள், இ.மி.ச யினால் முன்னதாகவே கணக்கிட்டு அச்சிடப்பட்டு நுகர்வாளர் ஒருங்கிணைப்பாளரிடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நுகர்வாளர் ஒருங்கிணைப்பாளர்களினால் குறித்துக் கொள்ளப்படும் மானி வாசிப்பு விபரங்கள் அனைத்தும் கணினித் தொகுதிக்கு தரவுப்பதிவேற்றம் மேற்கொள்ளும்போது சரி பிழை பார்க்கப்படும் என்பதுடன், ஏதேனும் தவறுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பின், அது அடுத்த பட்டியல் தாயரிக்கப்படும் போது தானியக்க முறை மூலம் திருத்தம் பெறும்.

தேவை எனின் நுகர்வாள்களுக்கு, இ.மி.ச வலைத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள பட்டியல் கணக்கிடல் எனும் பகுதியை பயன்படுத்தி, தனது பட்டியலின் பிழையற்ற தன்மையினை பரிசீலித்துக் கொள்ள முடியும்.