CEB | Knowledge Hub

மீள்புதுப்பிக்கதக்க சக்தி பற்றிய அறிமுகம்

மீள்புதுப்பிக்கதக்க சக்தி வலு என்றால் என்ன ?

மீள்புதுப்பிக்கதக்க சக்தி என்பது சூரியஒளி, காற்று, மழை, அலை, புவி வெப்பம் போன்ற இயற்கை வளங்களிலிருந்து கிடைக்கும் சக்தியாகும். இவற்றினைப் பாவிப்பதன் காரணமாக அவை குறைந்து போவதில்லை. ( இயற்கையாக அவை மீண்டும் மீண்டும் உருவாகும்)

உலகமின் நுகர்வில் 16 வீதமான சக்தியானது மீள்புதுப்பிக்கதக்க வளப் பாவனை மூலமாகும். இதில் 10 வீதமானது சம்பிரதாயபூர்வ உயிரினத்தொகுதியில் இருந்தாகும் என்பதுடன் அது முக்கியமாக வெப்பமேற்றப்படுவதற்கு பயன்படுத்தப்படுகின்றது. 3.4 வீதம் நீர் மின்சாரமாகும். புதிய மீள்புதுப்பிக்கதக்க மின்சக்தி வளங்கள் (சிறிய நீர் மின், புதிய உயிரினத்தொகுதி, காற்று, சூரியஒளி, புவி வெப்பம், மற்றும் இயற்கை எரிபொருட்கள்) மேலும் 2.8 வீதமளவாவதுடன், அவைகள் மிகவும் வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்றது.

மின்னுற்பத்தியில், மீள்புதுப்பிக்கதக்க சக்தி 19 சதவீதமான பங்களிப்பினை வழங்குவதுடன் உலக மின் உற்பத்தியில் 16 சதவீதமளவு நீர் மின்சாரத்திலிருந்து கிடைப்பதுடன் மற்றும் புதிய மீள்புதுப்பிக்கதக்க சக்தியிலிருந்து 3 வீதம் கிடைக்கின்றது.


நீர் மின்சாரம் என்றால் என்ன ?

நீரில் காணப்படும் சக்தியினை திட்டமிட்ட விதமாக பிரயோகிப்பதன் மூலம் பயன் பெறலாம். நீர், காற்றினை விடவும் 800 மடங்கு கனம் பொருந்தியது என்பதன் காரணத்தினால் மெதுவாகப் பாய்ந்து செல்லும் நீரோட்டம் ஒன்றினை அல்லது மத்திய அளவிலான கடல் அலை மூலமாக குறிப்பிடத்தக்களவு சக்தியினை உற்பத்தி செய்ய முடியும்.

பல்வேறு வகையில் நீர் மின்சாரம் பெறப்படுகிறது


காற்று மின்சாரம் என்றால் என்ன ?

காற்றின் சக்தியினைப் பாவித்து உற்பத்தி செய்யப்படுகின்ற மின்சாரம் காற்று மின்சாரமாகும். வீசுகின்ற காற்றின் மூலம் காற்று விசையாழிகள் (turbines) சுழல வைக்கப்படுகின்றது. நவீன காற்று விசையாழிகள் (turbines) 600kW அளவிலிருந்து 5 MWவரையான வலுவுடையது எனினும், வாணிபப் பயன்பாட்டிலுள்ளவை பொதுவாக 1.5 – 3.0MW இற்கு இடைப்பட்ட வலுவுடைய காற்று விசையாழிகளாகும் (turbines). காற்று விசையாழி (turbines) மூலம் உற்பத்தி செய்யப்படும் மின் சக்தி தீர்மாணிக்கப்படுவது, காற்றின் வேகத்தினாலாகும். காற்றின் வேகம்அதிகரிக்கும் போது மின்உற்பத்தி மிகப்பெரியளவில் அதகரிக்கிறது. கூடுதலாக மற்றும் தொடர்ந்து மாறா வேகத்தில் காற்று வீசுகின்ற கடலை அண்மித்த பிரதேசம் மற்றும் கூடதல் உயரம் கொண்ட பகுதிகள் காற்று மின்னுற்பத்தி வலயம் அமைப்பதற்கு பொருத்தமான பிரதேசங்களாகும். பொதுவான கொள்ளவு காரணி 20 வீதம் முதல் 40 வீதமளவு பெறுமானமுடையதுடன் மிகவும் நன்மை பயக்கும் பிரதேசங்களில் மேல் எல்லைப் பெறுமானம் உடையதாகும்.


சூரிய மின்சக்தி என்றால் என்ன ?

சூரிய மின் சக்தி என்பது சூரியனிலிருந்து சூரிய கதிர் (solar radiation) உதவியின் மூலம் பெறப்படும் சக்தியாகும். சூரிய சக்தி மூலம் பெறப்படும் மின் உற்பத்தியானது (photovoltaics and heat engines) ல் தங்கியுள்ளது. சூரிய சக்தியின் மூலம் செயற்படுத்தப்படும் பாவனைகளை குறிப்பிடுவதாயின் சூரிய சக்தியினை மூலம் இடங்களை குளிரூட்டல் அல்லது உஷ்ணப்படுத்தல், பகல் ஒளியேற்றல், நீர் சூடாக்கப்படல், உணவு சமைத்தல் மற்றும் உயர் வெப்ப அளவொன்றை ஏற்படுத்திக்கொள்ளும் செயற்பாடுகள் போன்றவைகள் உள்ளடங்கும்.

உயிரினத்தொகுதி (biomass) என்றால் என்ன ?

உயிரினத்தொகுதி (மரங்களிலிலிருந்து பெறப்படும்) யானது மீள்புதுப்பிக்கதக்க சக்தி வகையாகும். ஏனெனில் அவற்றில் காணப்படும் சக்தியானது சூரியனிலிருந்தே பெறப்பட்டதென்பதினாலாகும். மரங்கள் சூரிய சக்தியினை ஒளிச்சேர்க்கை மூலம் பெற்றுக்கொள்கிறது. நாம் அவற்றினை எரிக்கும் போது அவற்றில் உள்ளடங்கியுள்ள சூரிய சக்தி வெளியிடப்படுகிறது. இவ்வாறு பார்க்கும் போது உயிரினத்தொகுதி முறையை மின்சக்தியை சேமிக்கும் இயற்கை மின்கலம் ஒன்றாக தொழிற்படுகின்றது என குறிப்பிடலாம்.


இலங்கையில் நிலவும் தன்மை

இலங்கையானது தனது நாட்டின சக்தித் தேவைப்பாட்டினை நிறைவு செய்து கொள்வதற்கு பயன்படுததக்கூடிய மீள்புதுப்பிக்கதக்க சக்தி வளங்களைக் கொண்டுள்ளது. நாட்டின் மின் நிறுவனமாக இலங்கை மின்சார சபை, மீள்புதுப்பிக்கதக்க சக்தி வகைகளினால் மின்சாரத்தினை உற்பத்தி செய்தலை 1990 காலப்பகுதியின் ஆரம்ப காலப்பகுதியிலிருந்தே தனியார் துறையினருக்குப் பயிற்சி வழங்குதல், திறன் அபிவிருத்தி நடவடிக்கைகள், ஆரம்ப ஆய்வுக் கற்கைகள் மற்றும் வளங்களை மதிப்பிடல் உள்ளிட்ட தேவையான ஒத்தாசைகளை வழங்கி ஊக்கப்படுத்தியது. 1997 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இ.மி.ச யினால் சிறிய மீள்புதுப்பிக்கதக்க சக்தி உற்பத்தியாளர்களிடமிருந்து மின்சரத்தினை (SPPs) கொள்வனவு செய்யும் முறை முறைப்படுத்தப்பட்டது. இதற்காக தவிர்க்கப்பட்ட செலவுக் கொள்கையை (avioded cost) அடிப்படையாகக் கொண்டு மின்சக்தியினை கொள்வனவு செய்யும் தொகை மதிப்பிடும் முறைமையை உள்ளடக்கிய மின்சக்தி கொள்வனவிற்கான நியம ஒப்பந்தம் (SPPA) வெளியிடப்பட்டது. இது 10 MW இற்குக் குறைந்த கொள்ளளவு கொண்ட மின்னுற்பத்தி நிலையங்கள் அனைத்திற்கும் வழங்கப்பட்டது. (தவிர்க்கப்பட்ட செலவுக் கொள்கை - avioded cost என்பது மின் நிலையம் ஒன்றின் நிர்மாணத்திற்குப் பதிலாக மூன்றாம் தரப்பினர் ஒருவரிடமிருந்து மின்சாரத்தினை கொள்வனவு செய்தல் மூலம் இ.மி.ச இனால் தவிர்த்துக்கொள்ளப்படும் செலவாகும்.)

அதன் பின்னர், இலங்கை அரசினால் கூடிய உற்பத்திச்செலவு கொண்ட அனல் மின் உற்பத்தியிலிருந்து இலங்கை மின்னுற்பத்தியினை பல்வகைப்படுத்தும் செயற்பாட்டுக் கொள்கைக்கமைய மீள்புதுப்பிக்கதக்க சக்தி திட்டங்களின் அபிவிருத்தி இனம் காணப்பட்டது. இதனால், மீள்புதுப்பிக்கதக்க சக்தி வகைகளின் (சிறிய நீர் மின்சக்தி, காற்று, உயிரினத்தொகுதி (biomass)) அபிவிருத்திக்கெனத் தேவைப்படும் ஊக்குவிப்புத்தொகை மற்றும் உதவிகள் வழங்கப்பட்டன. அதே போன்று, மேலதிகமாக, தேசிய சக்திக் கொள்கை 2006, மின்னுற்பத்தியில் மூலப்பொருட்களின் பல்வகை மற்றும் சக்திப் பாதுகாப்பு என்பவற்றினை மூலோபாய கருதுகோள்களாக அடையாளப்படுத்தி, மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்களின் அபிவிருத்தியினை மூலோபாயங்களில் ஒன்றாக இனம் கண்டுள்ளது. மேற்குறித்தவற்றினைக் கருத்திற் கொண்டு, தவிர்க்கப்பட்ட செலவு அடிப்படை அறவீட்டுக்குப் பதிலாக 2007ஆம் ஆண்டு முதல் செலவு அடிப்படை, தொழில்நுட்பரீதியான, மூன்று அடுக்கு அறவீட்டினை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கையில் மீள்புதுப்பிக்கதக்க சக்தி அபிவிருத்தி தொடர்பாக மேலதிக விபரங்களுக்கு சம்பிரதாயபூர்வமற்ற மீள்புதுப்பிக்கதக்க சக்தித்துறையின் தற்போதைய நிலைமையினை பார்க்கலாம்.