CEB | Knowledge Hub

கேள்வி முகாமைத்துவம் என்றால் என்ன ?

கேள்வி முகாமைத்துவம் என்றால் என்ன ?

கேள்வி முகாமைத்துவம் (DSM) என்பது “நுகர்வாளர் மின்சாரத்தினைப் பாவிக்கும் அளவு மற்றும் நேரத்தினை மாற்றம் செய்வதற்கு திட்டமிடப்பட்ட பயன்பாட்டு தொகுதி செயற்பாடு அல்லது அரச செயற்பாடு” என்பனவற்றினை உள்ளடக்கியுள்ளது. அதன் மூலமாக சமூகத்திற்கு, வழங்கல் தரப்பினர்களுக்கு மற்றும் நுகர்வாளர்களிற்கு கூட்டாக நன்மை பயப்பதே நோக்கமாகும். எனவே கேள்வி முகாமைத்துவம் என்பது தனி ஒரு விடயத்தினை உள்ளடக்கப் பாவிக்கும் கூற்றன்று அது பல விடயங்களை உள்ளடக்குவதற்காக பாவிக்கும் சொற் பிரயோகமாகும்.அது, நுகர்வு முகாமைத்துவம் (load management (LM)) , சக்தி வினைத்திறன் பாவனை (EE) மற்றும் மின்மயமாக்கம் (electrification) போன்ற ஒன்றுடன் ஒன்று மாறுபட்ட பல நுகர்வு வளையி நோக்கங்களை (load shape objectives) பலதையும் கொண்ட பரந்த ஒரு பரப்பினை உள்ளடக்குகின்றது. (Load profiles) என்பது குறிப்பிட்டதொரு காலப்பகுதியில், சேவை வலயம் ஒன்றில் நுகர்வாளர்களின் மின் நுகர்வு மாற்றம் பெறும் விதத்திற்கு ஏற்ப அந்தத் தொகுதியில் காணப்படும் மின்னோட்டஅளவு ஆகும்.


நோக்கம்

கேள்வி முகாமைத்துவத்தின் (DSM) நோக்கம் நிறுவன மற்றும் “நுகர்வு வளையியின் தன்மையின் (load shape)” நோக்கங்கள் என வகைகளாகப் பிரியும் என்பதுடன் அவைகள் கீழ் விபரிக்கப்பட்டவாறாகும்.


நிறுவன நோக்கங்கள்

தனது குறிக்கோளை அடைவதற்காக இலங்கை மின்சார சபை செயற்பாட்டு மற்றும் முகாமைத்துவ நோக்கங்களை அமைத்துள்ளது. இது தமது மின் வழங்கலின் தரத்தினையும் தொடர்ச்சியான வழங்கலையும் செம்மையாக்குதல், மின்சாரத்தினை மோசடியாகப் பாவிக்கும் தன்மையினை குறைத்துக் கொள்ளல், தொகுதியில் ஏற்படும் இழப்பினைக் குறைத்துக்கொள்ளல், நுகர்வுமார்க்க தொகுதியினை அபிவிருத்தி செய்தல், உப நிலையங்களின் கொள்ளளவை உயர்த்துதல், வருமானச் சேகரிப்பு வினைத்திறனாக்குதல், நுகர்வாளர்களிற்கான சேவையினை மிகவும் நன்மை பயக்கும் விதமாகச் செய்து கொள்ளல் என்பன உள்ளடங்கும்.

நுகர்வு வளையியின் தன்மையின் (load shape) நோக்கங்கள்

உண்மையாகவே கேள்வி முகாமைத்துவம் (DSM), செலவை பயனுள்ளதாக்கும் மாற்று வழியாக வழங்கல் தரப்பில் காணப்படுகின்ற வழிமுறைகளிளொன்றாக முதலில் பிரதானமாகக் கருதப்பட்டாலும், அதன் தொடர்ச்சி, எந்ததொரு கேள்வி முகாமைத்துவ திட்டத்தின் போதும், இ.மி.ச இன் நுகர்வு வளையியின் தன்மையின் (load shape) நோக்கங்கள் அடையப்படுகின்றதா என்பது தலையானதாக கருதப்பட்டது.

 

வழங்கல் தரப்பில் காணப்படுகின்ற தெரிவுகள் போன்றே, கேள்வி முகாமைத்துவ தெரிவுகள் பொதுவாக கீழ்க்காட்டப்பட்டுள்ள ஏதாவதொரு நுகர்வு வளையியின் தன்மையின் (load shape) நோக்கங்களை முக்கியமாகக் குறிப்பிடுகிறது.

உச்ச கேள்வி குறைக்கப்படல்

முக்கியமாக உச்ச கேள்வி இருக்கின்ற காலப்பகுதியில் தொகுதியில் காணப்படுகின்ற “பயன்பாட்டு நுகர்வை” குறைத்தல்


நுகர்வு வளையியின் பள்ளத்தாக்கு நிரப்புதல்

கேள்வி இல்லாத காலப்பகுதிகளில் மின்தொகுதிக்கு நுகர்வினை ஏற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதன் மூலம் system load factor இனை மிகவும் சிறந்த நிலைக்கு எடுத்து வருதல். (மின் கேள்வி குறைந்த காலப்பகுதிகளில் அதற்குச் சமனாக வழங்கலும் குறைக்கப்படும். அதன் காரணமாக அக்காலப்பகுதிகளில் செயலிழக்கச் செய்யப்படும் குறைந்த செலவிலான மின்னுற்பத்தி நிலையங்களில் உற்பத்தி அளவினைக் கருத்திற்கொண்டு மின் நுகர்வினை ஏற்ற நடவடிக்கை செய்தல்.


“நுகர்வினை” இடமாற்றம் செய்தல்

முக்கியமாக உச்ச கேள்வி இருக்கின்ற காலப்பகுதியில், தொகுதியில் காணப்படுகின்ற “நுகர்வினை” குறைத்து, குறைந்த கேள்வியுள்ள காலப்பகுதியில் “நுகர்வினை” அதிகரிப்பத்கு நடவடிக்கை எடுக்கப்படும். “நுகர்வினை” இடமாற்றம் செய்தல் மொத்தமின் விற்பனையில் மாற்றம் ஏற்படுத்தாது.

இதற்கென காலத்தினை அடிப்படையாகக் கொண்ட அறவீடு பயன்படுத்தப்படும்(Time of Use rates / TOU Taiff ) என்பதுடன் அதன் மூலம் குறைந்த கேள்வியுள்ள காலப்பகுதிக்குள் மின் உபகரணப் பயன்பாட்டிற்கு நுகர்வாளர்களை நெறிப்படுத்தல்.


மூலோபாயப் பாதுகாப்பு (Strategic Conservation)

மின்சக்தியின் பாதுகாப்பு மற்றும் வினைத்திறன் உறுதிப்படுத்துவதற்காக நாளொன்றின் அனைத்து மணி நேரங்களிலும் அல்லது கூடிய மணி நேரங்களில் தொகுதியின் நுகர்வினை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சம அளவில் குறைதல்.

the reduction of utility loads, more or less equally, during all or most hours of the day


“நுகர்வினை” நிர்மாணம் செய்தல் Load Building

நாளொன்றின் அனைத்து மணி நேரங்களிலும் அல்லது கூடிய மணி நேரங்களில் தொகுதியின் நுகர்வினை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சம அளவில் அதிகரித்தல்.

 

இங்கு மொத்த மின் விற்பனையில் (overall sales) விற்பனை அதிகரிக்கும். இங்கு பிரதானமாக உச்ச கேள்வி காணப்படும் காலப் பகுதிகள் மற்றும் மொத்த மின் சக்தி நுகர்வு ஆகிய இரண்டும் அதிகரிப்புப் பெறும். இது பொதுவான மின்சக்தி அதிகரிப்பு மூலம் அல்லது புதிய நுகர்வாளர்கள் இணைத்துக்கொள்ளப்படல் மூலம் ஏற்படும்.

 


மிகவும் நெகிழ்வுத் தன்மை கொண்ட “நுகர்வு” முறைமையினை செயற்படுத்தும் முறைமை செய்தல். (Provision of a more flexible Utility Load Shape)

ஒப்பந்தங்களில் உள்ளவாறு மின்வழங்கலை இடை நிறுத்தம் செய்ய அல்லது மட்டுப்படுத்த, தேவைப்பாடு ஏற்படுகின்ற போது சேவை வழங்குநருக்கு நுகர்வாளர்களின் மின் நுகர்வினை மாற்றம் செய்வதற்கான தெரிவை அமைக்கும் திட்டங்கள். இந்த முறைமையின் போது விசேட நுகர்வு வகை அல்லது மின்சார “நுகர்வு” இடை நிறுத்தம் செய்வதற்கு சேவை வழங்குநருக்கு அனுமதி கிடைக்கின்றது. அதற்கென விசேட வகையைச் சேர்ந்த நுகர்வாளர்கள் ஒப்பந்தத்தினூடாக இணங்கியுள்ளார்கள். இந்த நெகிழ்வுத் தன்மை கொண்ட “நுகர்வு” செயற்படுத்துகை அமுல் படுத்தப்படும் போது அனேகமாக வழங்கல் இடை நிறுத்தம் செய்யக்கூடிய / மட்டுப்படுத்தக் கூடிய அறவீட்டு முறை அறிமுகம் செய்ய வேண்டி வருகின்றது.