தெரிவு செய்யப்பட்ட மின்னுற்பத்தி நிலையம் ஒன்றினைப் பார்வையிடச் செல்வதற்கு உத்தேசிக்கும் தினத்திற்கு இரு வாரங்களுக்கு முன்னதாக, அது தொடர்பாக அனுமதி கோரும் கடிதம் ஒன்றினை உரித்தான பிரதிப் பொதுமுகாமையாளர் அவர்களுக்கு முகவரியிட்டு ( விலாசங்கள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் LINK தரப்பட்டுள்ளன. ) அனுப்பி வைக்கப்படல் வேண்டும். அனுமதி கோரும் கடிதத்தில் கீழ்க்காணும் விபரங்கள் உள்ளடக்கப்பட வேண்டும். ( மாதிரிக் கடிதம் ஒன்று இப்பக்கத்தின் வலது பகுதியில் காணப்படுகின்றது. )
பார்வையிடும் திகதி
கலந்து கொள்வோர்கள் எண்ணிக்கை
பாடசாலைச் சிறுவர்கள் எனின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் விபரம்
பார்வையிட வரும் அனைவரினதும் தேசிய அடையாள அட்டை இலக்கம்.
அனுமதி கோருபவர்களது தொடர்பு தொலைபேசி இலக்கம் மற்றும் தொலைநகல் இலக்கங்கள்.
அனுமதி கோருபவர்களது முகவரி.
பார்வையிட வருவதற்கு முன்னர், மேல் தரப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை பற்றி உறுதிப்படுத்திக் கொள்ளலாம். வருகை தர உத்தேசிக்கும் தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக அனுமதி வழங்கல் பற்றிய கடிதம் கிடைக்கப் பெறவில்லை எனின் தயவு செய்து உரிய பிரதிப் பொதுமுகாமையாளர் அலுவலகம், உடனடியாகதொடர்பு கொள்ளுங்கள்.