இலங்கை மின்சார சபை ISO 14001:2004 சர்வதேச சான்றிதழினை கைக்கொள்கின்றது.
ISO 14001:2004 சான்றிதழ் அளவையானது, ஏதேனும் ஒரு நிறுவனத்தின், சட்டரீதியான தேவைகளை நிறைவேற்றுமுகமாகவும், நிறுவனத்தினால் பதிவு மேற்க்கொள்ளப்பட்ட மற்றும் சுற்றாடல் ரீதியான குறிப்பிடத்தக்க தகவல்களான, செயல்ரீதியாக சுற்றாடலுக்கு ஏற்படக்கூடிய சேதங்கள் இருப்பின் அதனைக் குறைத்துக் கொள்ளல் அல்லது சுற்றாடல் பாதிப்புக்கள் இல்லாத அளவிற்கு கொண்டு வருதல் தொடர்பான ஏனைய அதி விசேட சுற்றாடல் விடயங்களுக்கு இயைபாகும் விதமாகவும், கொள்கை மற்றும் நோக்கங்களை அபிவிருத்தி செய்யவும் மற்றும் செயற்படுத்தவும் தேவையான சுற்றாடல் முகாமைத்துவ முறைமையை உரிய முறையில் குறிப்பிட்டுக் கூறுவதாகும். நிறுவனத்தினால் இனம் காணப்பட்ட கட்டுப்படுத்தக்கூடிய மற்றும் செல்வாக்குச்செலுத்துகின்ற சுற்றாடல் ரீதியான செயற்படுகளிற்கு பொருத்தப்பாடுடையதாகிறது. அதனைத் தவிர அதனுள் குறிப்பிடத்தக்க சுற்றாடல் கரும நியதிகள் தொடர்பாக குறிப்பிடப்படவில்லை.
சுற்றாடல் முகாமைத்துவ முறைமை ஒன்றினை நிறுவி, செயற்படுத்தி, நடாத்திச் செல்வதற்கும் அபிவிருத்தி செய்து கொள்வதற்கும் எதிர்பார்க்கும் எந்ததொரு நிறுவனத்திற்கும் ISO 14001:2004 சான்றிதழ் அளவை ஏற்புடைத்தாகின்றது. மேலும் அந்த நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட சுற்றாடல் கொள்கைக்குப் பொருந்தும் விதமாகவும் ISO 14001:2004 அளவைப் பிரமாண சான்றிதழின் கொள்கைகளுக்கு நிறுவனத்தில் காணப்படுகின்ற இயைபுத் தன்மையினை நிரூபிப்பதற்கு
a) சுயமாக நிர்ணயித்தல் மற்றும் சுயமாக பிரகடனம் ஒன்றினை வெளியிடல், அல்லது
b) வாடிக்கையாளர்கள் போன்ற நிறுவனம் தொடர்பாக அக்கறை காண்பிக்கின்ற தரப்பினர்களால் அதற்குக் காணப்படும் இயைபுத் தன்மை பற்றி உறுதிப்பாடு பெற்றுக் கொள்ளல், அல்லது
c) நிறுவனத்திற்கு வெளித் தரப்பினரிடமிருந்து “சுயமாக பிரகடனத்திற்கு” காணப்படும் இயைபுத்தன்மையினை உறுதிப்படுத்திக் கொள்ளல், அல்லது
d) வெளி அமைப்பென்றினால், நிறுவனத்தின் சுற்றாடல் முகாமைத்துவ முறைமைக்கு உரிய உறுதிப்பாடு பெற்றுக் கொள்ளல் அல்லது சான்றிதழ் பதிவு மேற்கொள்ளல்.
ISO 14001:2004 இல் காணப்படும் தேவைப்பாடுகள் அனைத்தும் எந்ததொரு சுற்றாடல் முகாமைத்துவ முறைமைக்கும் உள் வாங்கப்பட கூடிய நோக்கம் கொண்டதாகும். இருப்பினும் அவைகள் எந்த அளவிற்கு ஈடுபடுத்திக் கொள்ளப்பட்டது என்பது, உரிய நிறுவனத்தின் சுற்றாடல் கொள்கை, நிறுவனச் செயற்பாட்டுத் தன்மை, உற்பத்திகள் மற்றும் சேவைகள் போன்றே நிறுவனம் நிறுவப்பட்டிருக்கும் இடம் மற்றும் அது செயல்படும் தன்மை என்பனவற்றின் மீது தங்கியுள்ளது.
ISO 14001:2004 சான்றிதழ் அளவையினை பயன்படுத்தும் முறை தொடர்பான விபரங்களுடன் கூடிய வழிகாட்டி அதன் இணைப்பு “எ” இல் தரப்பட்டுள்ளது