2015 மார்ச் 6 ஆம் திகதி இடப்பட்ட 1904/58 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட (Five Digit Detailed Version) விபரங்களுடன் கூடிய வகைப்படுத்தலின் கீழ், உரிய பிரிவுகளில் விபரிக்கப்பட்டுள்ள ‘விவசாயம்’, ‘காட்டு இலாகா மற்றும் மீன் பிடி’, ‘சுரங்கம் மற்றும் கற்குழி’, ‘உற்பத்தி’, ‘மின், எரி வாயு, நீராவி மற்றும் வளிச்சீராக்கி வழங்குகை’, நீர் வழங்கல்: கழிவு நீர், கழிவு முகாமைத்துவம் மற்றும் மாற்று செயற்பாடுகள்’ போன்ற விடயங்களின் பாவனைக்கென மின்சாரம் வழங்கல். வர்த்தமானியின் பிரதி ஒன்றினை கீழுள்ள இணைப்பினை அழுத்துவதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
நுகர்வாளர் வகை I -1
ஒப்பந்தக் கேள்வி 42kVA ற்கு சமனான அல்லது அதற்குக் குறைந்த, 400/230 V ல் மின் வழங்கல் செய்யப்பட்டு மானி வாசிப்பு பெறப்படும், ஒவ்வொரு தனிப்பட்ட அலகுகளுக்கும் இந்த அறவீடு செல்லுபடியாகும்.
அட்டவணை 2- கைத்தொழில் I-1 நுகர்வாளருக்கான அறவீடு
மாதாந்த நுகர்வு (kWh) | சக்திக் கட்டணம் (LKR/kWh) | நிலையான கட்டணம் (LKR/month) | ஒரு மாதத்திற்கான உச்சக் கேள்விக் கட்டணம் (LKR/kVA) |
<301 | 10.80 | 600.00 | – |
>300 | 12.20 |
நுகர்வாளர் வகை I-2
ஓப்பந்தக் கேள்வி 42kVA ற்கு மேற்பட்ட, 400/230 V ல் மின் வழங்கல் செய்யப்பட்டு மானி வாசிப்பு பெறப்படும், ஒவ்வொரு தனிப்பட்ட அலகுகளுக்கும் இந்த அறவீடு செல்லுபடியாகும்.
அட்டவணை 3 –கைத்தொழில் I– 2 நுகர்வாளருக்கான அறவீடு
நேர இடைவெளி | சக்திக் கட்டணம் (LKR/kWh) | நிலையான கட்டணம் (LKR/month) | மாதத்திற்கான உச்சக் கேள்விக் கட்டணம் (LKR/kVA) |
உச்ச நேரம் (18.30-22.30) | 20.50 | 3,000.00 | 1,100.00 |
பகல் நேரம் (5.30-18.30) | 11.00 | ||
உச்சமற்ற நேரம் (22.30-05.30) | 6.85 |
நுகர்வாளர் வகை I -3
11,000 V அல்லது அதற்கு மேல் மின் வழங்கல் செய்யப்பட்டு மானி வாசிப்பு பெறப்படும், ஒவ்வொரு தனிப்பட்ட அலகுகளுக்கும் இந்த அறவீடு செல்லுபடியாகும்.
அட்டவணை 4 –கைத்தொழில் I– 3 நுகர்வாளருக்கான அறவீடு
நேர இடைவெளி | சக்திக் கட்டணம் (LKR/kWh) | நிலையான கட்டணம் (LKR/month) | மாதத்திற்கான உச்சக் கேள்விக் கட்டணம் (LKR/kVA) |
உச்ச நேரம் (18.30-22.30) | 23.50 | 3,000.00 | 1,100.00 |
பகல் நேரம் (5.30-18.30) | 10.25 | ||
உச்சமற்ற நேரம் (22.30-05.30) | 5.90 |
இந்த ஆவணம் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் வெளியீடாகும். இந்த ஆவணத்தில் காணப்படும் விடயங்கள் தொடர்பாக இலங்கை மின்சார சபை எவ்விதத் தெளிவு படுத்தல்களையும் மேற்கொள்ளாது. இவ் ஆவணத்தினைப் பதிவிறக்கம் செய்யும் எவரும் ஏதேனும் தெளிவு பெறுதல்கள் தேவை எனின் 2010 பெப்ரவரி 24 ஆம் திகதி ஆணைக் குழுவினால் விளம்பரம் செய்யப்பட்ட பத்திரிகையில் கொடுக்கப்பட்டுள்ள தொலை பேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு ஆணைக்குழுவிடமிருந்து விபரங்களைக் கோருமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். இந்த ஆவணம் தொடர்பாக பொதுப் பயன் பாட்டு ஆணைக்குழுவிற்கு தரவுகள் வழங்கப்பட்டதைத் தவிர ஏனைய விடயங்களுக்கு இலங்கை மின்சார சபை பொறுப்புக் கூற மாட்டாது.