CEB | Business With CEB

என்.சி.ஆர்.இ என்றால் என்ன தேசிய எரிசக்தி கொள்கை தற்போதைய நிலை

சம்பிரதாயபூர்வமல்லாத மீள்புதுப்பிக்கதக்க சக்தி அறவீட்டு முறைமை

இலங்கை அரசு, கொள்கை அடிப்படையில் மின்னுற்பத்தி துறையினை பல் வகைப்படுத்தி, செலவு அதிகரிப்புக் கொண்ட அனல் மின்னுற்பத்திக்குப் பதிலாக மீள்புதுப்பிக்கதக்க சக்தித் திட்டங்களின் அபிவிருத்திகளை இனம் கண்டுள்ளது. எனவே மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வள அபிவிருத்திக்குத் தேவையான உதவிகள் மற்றும் ஊக்குவிப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன (சிறிய நீர் மின்னுற்பத்தி, உயிரினத்தொகுதி, காற்று போன்றவைகள்). மேலதிகமாக, தேசிய சக்திக் கொள்கை 2006, மின்னுற்பத்தியில் மூலப்பொருட்களின் பல் வகைதன்மை மற்றும் சக்திப் பாதுகாப்பு என்பவற்றினை மூலோபாய கருதுகோள்களாக அடையாளப்படுத்தி, மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்களின் அபிவிருத்தியினை மூலோபாயங்களில் ஒன்றாக இனம் கண்டுள்ளது. மேற்குறித்தவற்றினைக் கருத்திற் கொண்டு, தவிர்க்கப்பட்ட செலவு அடிப்படை அறவீட்டுக்குப் பதிலாக, 2007ஆம் ஆண்டு முதல், செலவு அடிப்படை, தொழில்நுட்பரீதியான, மூன்று அடுக்கு அறவீட்டினை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


செலவு அடிப்படை, தொழில்நுட்பரீதியான NCRE அறவீடு

NCRE மின்னுற்பத்தி நிலையங்களுக்கு செலவு அடிப்படையில் அறவீட்டு முறைமையினை தீர்மானிப்பது பல நாடுகளிலும் பொதுவான நடைமுறையாக உள்ளது. இந்த முறைமையில் அறவீட்டு முறை கணக்கிடப்படுவதானது கருத்திட்ட அபிவிருத்தியாளர்களுக்கு அதன் செயற்பாட்டு மற்றும் பராமரிப்பு செலவு மற்றும் மூலதனச் செலவுகளை ஈடு செய்து கொள்வதற்கு இயலுமாகின்றது. மூலதனத்திற்கான பிரதியீட்டினை அது உறுதி செய்கின்றது.

இம் முறையானது, கருத்திட்ட நடவடிக்கை காரணமாக ஏற்படும் பணப்புழக்கத்தின் மூலதன வருவாயை  பணச்செலவின் ஒரு கூறாக ஆய்வு செய்து, ஆண்டிற்கான உற்பத்திச் செலவினை மதிப்பீடு செய்கின்றது. இம் முறைமை பிரயோகிக்கப்படும் போது சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. அறவீடானது, ஆரம்ப வருடங்களில் (கடன் மீள்செலுத்தும் காலப்பகுதி) கூடிய அறவீடாகவும் அதன் பின்னரான காலப்பகுதியில் செயற்பாட்டுச் செலவினையும் மூலதனப் பிரதிபலனையும் ஈடு செய்யும் வகையில் குறைந்த அறவீடாகவும் வரிசையாக வழங்கப்பட முடியும். இந்த முறைமையின் கீழ் அறவீடு கணக்கிடப்படும் போது, செலவு அதிகரிப்பு, செயற்பாட்டு மற்றும் பராமரிப்பு செலவு, எரிபொருட் செலவு அதிகரிப்பு மற்றும் மானிய உதவித் தொகைகள் அல்லது வேறு நிதி ஊக்குவிப்புக்கள் என்பனவும் உள் வாங்கப்படலாம். இந்த முறைமையின் கீழ் கணக்கிடப்படும் அறவீடு, செயற்திறன் மற்றும் செலவு என்பனவற்றினூடாக ஒரு தொழில் நுட்பத்திலிருந்து பிறிதொரு தொழில் நுட்பத்திற்கு வேறுபடும். மேலதிகமாக இம் முறைமையின் கீழ் அறவீடு மதிப்பிடப்படுவது திட்டத்தின் / தொழில் நுட்பத்தின் செலவு மற்றும் திறன்பாட்டில் மாத்திரம் தங்கியுள்ளது. 

செலவு அடிப்படையிலான அணுகுமுறையில்,  அறவீடானது ஒவ்வொரு திட்டம் தொடர்பாகவும் மதிப்பிடப் படல் வேண்டும். ஆயினும் வளம் மற்றும் நேரப் பற்றாக்குறை காரணமாக தொழில் நுட்ப தரப்படுத்தல் முறை பொதுவாகப் பிரயோகிக்கப்படுகிறது. இதன் போது அறவீடு மதிப்பிடப்படுவதற்கு இயந்திர உபகரண விடயங்கள் (மின்னுற்பத்தி நிலைய பங்களிப்பு காரணி) மற்றும் மூலதனச் செலவு போன்ற சராசரி காரணிகள் பயன்படுத்தப்படுகின்றன.

செலவு அடிப்படையிலான தொழில்நுட்பரீதியான NCRE அறவீடு 2012.01. 01 முதல் மீள் அறிவித்தல் வரை அமுலில் உள்ளது.

நியமப்படுத்தப்பட்ட மின்வலுக்கொள்வனவு ஒப்பந்தங்கள்

1. சிறிய நீர் மின்னுற்பத்தி

2.விவசாய மற்றும் கைத்தொழில் கழிவு மூலம்

3. உயிரினத்தொகுதி (மரத்துகள்கள்)

4. மாநகரக் கழிவு

 

NCRE Tariff Announcement

Click here to download the NCRE Tariff Announcement as a PDF.

 

 

தேசிய சக்திக் கொள்கை

தேசிய சக்திக் கொள்கை மற்றும் முறைமைகளில் (2008) குறிப்பிடப்பட்ட பல குறிக்கோள்களை, நாட்டில் மின்னொளியூட்டலை பூரணப்படுத்தியதன் மூலமாகவும் மற்றும் மீள்புதுப்பிக்கதக்க சக்தித் திட்டங்களின் அபிவிருத்திகளூடாகவும் இலங்கை அடைந்துள்ளது. இலங்கையின் சுயவளங்கள் மீதான நம்பிக்கை, முக்கியத்துவ அதிகரிப்பு மற்றும் மீள்புதுப்பிக்கதக்க சக்தித் துறையின் தொடர்ச்சியான அபிவிருத்தி என்பன தொடர்பாக தேசிய சக்திக் கொள்கை (2019) தனது பத்து கட்டமைப்பில்  ஒரு பகுதியாக வலியுறுத்திக்கூறுகின்றது. இது தொடர்பான விரிவான விளக்கம் 2019 ஆகஸ்ற் 9 ஆம் திகதி இடப்பட்ட 2135/61 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் விவரிக்கப்பட்டுள்ளது.  இதனை இங்கே பதிவிறக்கம் செய்ய முடியும் .

மீள்புதுப்பிக்கதக்க சக்தித் துறையின் தற்போதைய நிலை (2022. 06.21 ஆம் திகதியின் போது)

இல்லை விளக்கம் திட்ட வகை திட்டம் திறன் (MW)
01 ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் சிறிய நீர் மின்னுற்பத்தி 213 426.434
02 - காற்றுமின் சக்தி 17 148.45
03 - உயிரினத்தொகுதி - விவசாய மற்றும் கைத்தொழில் கழிவு சக்தி 4 13.08
04 - உயிரினத்தொகுதி (மரத்துகள்கள்) சக்தி 9 27.01
05 - சூரிய சக்தி 75 108.36
06 - Municipal Solid Waste 1 10
01 - மொத்தம் - ஆணையிடப்பட்டது 319 733.334


ஆண்டு 2010 2011 2012 2013 2014 2015 2016 2017 2018 2019 2020 2121 2022
ஆற்றல் (GWh) 222 257 320 363 436 462 517 566 609 640 0 0 743


ஆண்டு 2011 2012 2013 2014 2015 2016 2017 2018 2019 2020 2021 2022
ஆற்றல் (GWh) 722 730 1178 1215 1466 1170 1463 1714 1711 1704 2252 2010