மின் உபகரணங்கள் தண்ணீருடன் தொடர்பு நிலையில் உள்ள போது பயன்படுத்துதல் கூடாது.
பாவனையில் இல்லாத மின் உபகரணங்கள் யாவும் அடைப்பான்களின் (ப்ளக்) தொடர்பிலிருந்து அகற்றப்படல் வேண்டும்.
உலோகப் பொருட்களினால் மின் உபகரணம் தொடப்படக் கூடாது.
மின் உபகரணப் பாவனையின் போது உங்கள் கைகள் ஈரமில்லாதவாறு (உலர்ந்ததாக) இருப்பதனை உறுதி செய்து கொள்ளுங்கள்.
மின் சூடாக்கி (ஹீட்டர்) அல்லது வெப்பத்தட்டு அடுப்பு (ஹட்பிளேற்)அருகில் மரத்தளபாடங்கள் வைக்கப்படுதல் அல்லது ஆடைகள் தொங்க விடப்படுதல் கூடாது.
தீப்பற்றிக் கொள்ளாத மட்டமான மேற்பரப்பில் மின் சூடாக்கி (ஹீட்டர்) வைக்கப்படல் வேண்டும்.
உபகரண மின்வடங்கள் (வயர்கள்) அடுப்பு மற்றும் சூடான மேற்பரப்புடன் தொடர்பு படுதலை தவிர்த்தல்வேண்டும்.
அடைப்பான்களிருந்து (ப்ளக்) மின் உபகரணகளை அவற்றின் மின்வடங்களை (வயர்களை) இழுப்பதன் மூலம் அகற்றப்படல் கூடாது.
பழுது பட்ட மற்றும் வெடிப்புக் கொண்ட மின் உபகரணங்களின் மின்வடங்களிற்கு (வயர்களிற்கு) பதிலாக புதிய மின்வடங்கள் (வயர்கள்) பயன்படுத்தப்படுதல் வேண்டும்.
வீடுகளில் மின்வடங்களை (வயர்களை) நடமாடும் பகுதிகளில் வைத்தல் கூடாது
உபகரண மின்வடங்கள் (வயர்கள்) குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு எட்டாத விதமாகப் பாதுகாப்புடன்கூடியதாக வைக்கப்படல் வேண்டும்.
சுற்று நீட்டிப்பு வடங்களை முடியுமானவரை குறைவாகப் பயன்படுத்தப்படுதல் வேண்டும்.
“மின்சுற்றுடைப்பான்“மற்றும் “உருகிகள்” மாற்றம் செய்யப்படும் போது சரியான அளவிலான பாகங்கள் பயன்படுத்தப்படுதல் வேண்டும்.
வெளிப்புறப்பகுதிக்கான மின்சுற்றானது தனியானதொரு சுற்றாக அமைதல் வேண்டும்.
மின் அடைப்பான்கள் (ப்ளக்) தவிர்ந்த வேறு பொருட்களை மின் அடைப்பான் சொருகி (ப்ளக் பொயின்ட்) ஒன்றினுள் செலுத்தக் கூடாது.
மின்வடங்களை (வயர்களை) “காபற்” களுக்குக் கீழாக மற்றும் பாரமான தளபாடங்களுக்குக் கீழாக எடுத்துச் செல்ல வேண்டாம்.
ஒரே நேரத்தில் அதிகளவு உபகரணங்களை தனியொரு “பொயின்ட்” ல் பயன்படுத்தி கூடுதல் சுமையினை ஏற்றாதீர்கள். அருகாமையில் பல அடைப்பான் சொருகிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
வெளிப்புறபாவனையில் போது அதற்கென அனுமதி வழங்கப்பட்டுள்ள “வெளிப்புற” நீட்டிப்பு மின்வடங்களை பயன்படுத்துங்கள்.
வெளிப்புறப்பகுதி மின் பாவனைப்புள்ளிகளை, பாதுகாப்பான மற்றும் வானிலை மாறுதல்களால் பாதிக்கப்படாத மேலுறைகள் கொண்டு பாதுகாப்பு செய்யுங்கள்.
வீட்டில் பிரதான ஆளி (சுவிட்ச்) பொருத்தப்பட்டிருக்கும் இடத்தினை அறிந்து வைத்திருங்கள்.
மின் அடைப்பான் சொருகியில் (ப்ளக் பொயின்ட்) ஒரு போதும் மின் அடைப்பான்களை (ப்ளக்) பலவந்தமாக உட் செலுத்தாதீர்கள்.
திருத்துதல் மற்றும் துப்பரவாக்கலின் போது அனைத்து உபகரணங்களும் மின் அடைப்பான்களிலிருந்து (ப்ளக்) அகற்றப்படல் வேண்டும்.
நீரினுள் விழுந்த மின் உபகரணம் ஒன்றினை எடுக்க முயற்சிக்கும் முன்னர், அதனை மின் அடைப்பான்களிலிருந்து (ப்ளக்) அகற்றுங்கள்.
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நீருடன் தொடர்பு பட்டிருக்கும் போது, ஈரலிப்பான இடத்திலிருந்து கொண்டு மின் உபகரணம் ஒன்றினைப் பயன்படுத்தாதீர்கள்.
மின் உபகரணங்களுக்கு மூன்று பின் சொருகிகளையே (ப்ளக்) பயன்படுத்துங்கள்.
ஆடைகள் மற்றும் தளபாடங்களிலிருந்து ஆகக் குறைந்தது 4 அடிகளுக்கு அப்பால் மின் சூடாக்கிகளை (ஹீட்டர் ) வையுங்கள்.
மெத்தை சூடேற்றி (heating pad) அல்லது இடச்சூடேற்றி (space heater) இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் உறங்கச் செல்ல வேண்டாம்.
பாவனையின் பொழுது அதிக வெப்பமாகும் உபகரணங்களை மின் அடைப்பான் சொருகியிலிருந்து (ப்ளக் பொயின்ட்) வேறு படுத்தி, நிபுணத்துவம் கொண்டவர்கள் மூலம் திருத்தம் செய்து கொள்ளுங்கள்.
மின் குமிழ் ஒன்றினை மாற்றம் செய்வதற்கு முன்னர் ஆளியை துண்டிப்பு (off) செய்யுங்கள்.
ஒரு சில தலைக்கு மேலாலான மின் மார்க்க வடங்கள் காவலிடப்பட்டுள்ளது போன்று தென்படினும் அதற்கு வானிலை மாறுதல்களால் பாதிக்கப்படாத பாதுகாப்பு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான மின் மார்க்க வடங்கள் தொடுவதற்குப் பாதுகாப்பு அற்றதாகும். மின் மார்க்க வடங்களின் ஏதாவது பகுதியினை உடம்பின் ஏதேனும் ஒரு பாகத்தினால் அல்லது ஏணி, மரத்துண்டு/கொப்பு, கம்பம், கயிறு அல்லது பட்டம் போன்ற பொருட்களினால் தொடுவது கடுங்காயத்தினை அல்லது மரணத்தினையும் ஏற்படுத்தலாம். மின்சாரமானது, நீர், உலோகம், மரம், அலுமினியம், கயிறு மற்றும் பிளாஸ்டிக் போன்ற கடத்திகள் மூலம் கடத்தப்படக் கூடியதாகும். மின் மார்க்க வடங்கள் விழுந்து கிடப்பதனை அவதானிப்பின், நீங்கள் மற்றும் மற்றவர்களை அந்த இடத்திலிருந்து விலகியிருக்கச் செய்து, உடனடியாக 1987 இலக்கத்தினூடாக இ. மி. சபையின் அழைப்புநிலையத்திற்கு தொடர்பு கொண்டு அறிவியுங்கள்.
ஏணி, சாரமேடை, மரம் அறுக்கும் வாள் மற்றும் நீச்சற்குளம் துப்பரவு செய்யும் உபகரணங்கள் போன்ற நீண்ட பொருட்கள் எடுத்துச் செல்லும் பொழுது அவைகள் மின் மார்க்க வடங்களில் தொடுகையுறுவதனை தவிர்ப்பதற்காக, அவற்றினை நிலத்திற்குச் சமாந்தரமாகப் பிடித்துச் செல்லுங்கள். அவற்றினை மேலே உயர்த்தும் பொழுது அவைகள் மேலே உள்ள மின் மார்க்க வடங்களில் தொடுகையுறாதிருப்பதனை உறுதி செய்து கொள்ளுங்கள்.
வெளிப்புற மின் உபகரணங்களைப் பயன்படுத்தும் பொழுது சப்பாத்து அணிந்திருங்கள்.
உங்கள் பாதுகாப்பிற்காக மின் மார்க்க வடங்களிலிருந்து முறையான தூர இடைவெளியினைப் பேணுங்கள். குறிப்பிட்ட இடைவெளி பேணப்படல் வேண்டும் என்பது சட்ட ரீதியான தேவைப்பாடாகும். மேலும் மின் மார்க்க வடங்களிற்க்கு கீழாக அல்லது அருகில் வேலை செய்யும் போது ஆகக் குறைந்தது 10 அடி இடைவெளி தூரம் பேணப்படல் வேண்டும் என்பது கட்டாயமானதாகும்.
பாதுகாப்பு முறைகள் குறித்து குழந்தைகள் அறிவூட்டப்படல் வேண்டும். மேலும் அவர்களை உப மின் நிலையங்கள், மின் பரிமாற்றல் கோபுரங்கள், மின்மாற்றிகள் மற்றும் மின் மார்க்க வடங்களிலிருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தல் வேண்டும்.
மின் மார்க்க வடங்களில் தொடுகையுறும் அல்லது அருகில் உள்ள மரங்களின் மீது ஏற வேண்டாம்.
ஏற்படக்கூடிய அதிர்வுகளிலிருந்து பாதுகாப்புப் பெறும் வகையில் வெளிப்புற பகுதி மின்புள்ளிகள் யாவற்றிலும் புவியினூடான மின்கசிவு தடுப்பு சாதனம்(ground earth leakage currentinterrupter )இருப்பதனை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.