CEB | Business With CEB


2021 புது வருடக் கடமைகள் ஆரம்பிக்கப்பட்டன


இலங்கை மின்சார சபைத் தலைமையகத்தில் 2021 - புது வருட கடமைகள் ஆரம்பித்து வைக்கப்படல் 2021 ஜனவரி மாதம்  01 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

தற்போது நிலவுகின்ற கொவிட் - 19 தொற்று வியாபிப்பின் மத்தியில் ஊழியர்களின் சுகாதாரப் பாதுகாப்பினை உறுதி செய்தல் மற்றும்  மக்கள் ஒன்று கூடுதலைக் குறைத்துக்கொள்ளல் என்பன காரணமாக அது தொடர்பான அரச அறிவுறுத்தல்களுக்கு அமைவாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மத அடிப்படையிலான நிகழ்வுகளின் பின்னர் புது வருட கடமைகள் ஆரம்பிக்கப்படுதலை குறிக்கும் விதமாக தேசியக்கொடி ஏற்றி வைக்கப்படல் இலங்கை மின்சார சபைத் தலைவர் பொறியியலாளர் திரு. விஜித ஹேரத் அவர்களினாலும், இலங்கை மின்சார சபையினது கொடி ஏற்றி வைக்கப்படல் இலங்கை மின்சார சபையின் பொதுமுகாமையாளர் பொறியியலாளர் திருமதி. என். டப். கே. ஹேரத் அவர்களினாலும் மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் மற்றும் இலங்கை மின்சார சபைக் கீதம் இசைக்கப்படல் இடம் பெற்றதுடன், தாய் நட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த யுத்த வீரர்கள் உள்ளிட்ட அனைவர்களையும் நினைவு கூர்ந்து இரண்டு நிமிட மௌனம் அனு~;டிக்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு இலங்கை மின்சார சபை சிரே~;ட அலுவலர்கள் பலரும் பங்கு கொண்டனர்.

அத்தோடு நாடு முழுவதும் இலங்கை மின்சார சபை பிரிவு ஃகிளை ஃ அலகு தலைவர்களின் தலைமையின் கீழ்  குறித்த அலுவலகப் பகுதியில் அரச சேவை உறுதியுரை வழங்கல் ஃ சத்தியப் பிரமாணம் செய்தல் மற்றும் நிறுவனத் தலைவரின் குறுகிய சிற்றுரை என்பன நடாத்தப்படுவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
 

தொடர்புடைய செய்திகள்