CEB | Business With CEB


இமிச ஒன்லைன் அங்குரார்ப்பணம்


இலங்கை மின்சார சபை தனது உத்தியோகபூர்வ இணைய வலைப்பின்னல் மூலமாக வழங்குகின்ற ஒன்லைன் சேவையுடன்  புதிதாக ஒன்றிணைத்துக் கொண்ட  CEB Care Web Portal   சேவையினை உத்தியோகபூர்வமாகத் ஆரம்பித்து வைப்பதனை நோக்காகக் கொண்டு ஒழுங்கமைக்கப்பட்ட விசேட நிகழ்வு இமிச தலைமையகக் கட்டடத்தில் இடம் பெற்றது.

அந்த வைபவத்தின் போது பிரதான அதிதிகளாக மின்வலு கௌரவ அமைச்சர் டளஸ் அலஹப்பெரும மற்றும்  சூரிய சக்தி, காற்று மற்றும் நீர்மின் உற்பத்தித் கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ துமின்த திஸாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர். அத்துடன் இலங்கை மின்சார சபைத் தலைவர் பொறியியலாளர் திரு. விஜித ஹேரத், இலங்கை மின்சார சபை உப தலைவர் திரு. என். எஸ். இலங்ககோன், இமிச பொதுமுகாமையாளர் திருமதி என். டப். கே. ஹேரத் உள்ளிட்ட இலங்கை மின்சார சபை சிரே~;ட அலுவலர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

CEB Care Web Portal   தொகுதி மூலமாக இந்த சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டதன் காரணமாக இமிச ஒன்லைன் சேவைப்பாவிப்பின் மூலம் புதிய மின் சேவை பெறுவதற்காக விண்ணப்பம் செய்தல், மின் கம்பங்கள் இடமாற்றம் செய்யப்படல், மின் மானிகள் மாற்றம் செய்யப்படல், மின் மானி மூடிகள் மாற்றம் செய்யப்படல், மின் தொடர்புகள் மாற்றம் செய்யப்படல் போன்ற பல்வேறு வகையிலான சேவைகளைப் பெறுவதற்கு மிகவும் இலகுவான விதமாக விண்ணப்பம் செய்யும் ஆற்றல் பொது மக்களுக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதற்கு மேலதிகமாக பட்டியல் கொடுப்பனவு வசதி, மின்சாரத் தடைகள் பற்றி அறிவிக்கும் வசதி, முன்னர் திட்டமிட்டபடி மின்சாம் தடை செய்யப்படும் நேரங்கள் குறிப்பிடப்பட்ட கால அட்டவணை, மின்சார முறிவுகளை எடுத்துக்காட்டும் வரைபடச் சேவை, குறுச்செய்திச் சேவை, மின் பட்டியலினைக் கணக்கிடும் முறை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இமிச வலைப்பின்னல் மூலமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
 

தொடர்புடைய செய்திகள்