CEB | Business With CEB


நாவலப்பிட்டிய பிணைய உப நிலையம் திறந்து வைக்கப்பட்டது.


பிரான்ஸ் நிதி அபிவிருத்தி நிறுவனத்தின் (FDA) கடனுதவியினூடாக இலங்கை மின்சார சபையின் செயற்படுத்தலின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட நாவலப்பிட்டியின் 132/33kV மின் விநியோக அமைப்பு உப நிலையம் பிரான்ஸ் தூதுவர் அதிமேதகு எரிக் லெவர்த்து மற்றும் மின்சக்தி அமைச்சர் கௌரவ டலஸ் அலஹப்பெரும ஆகியோரது கரங்களால் நேற்றைய தினம் (18) திறந்து வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில், மின்சக்தி அமைச்சின் செயலாளர் திருமதி. வஸந்தா பெரேரா, இலங்கை மின்சார சபையின் தலைவர் பொறியியலாளர் திரு. விஜித்த ஹேரத், இ.மி.ச. உப தலைவர் திரு.என்.எஸ்.இலங்ககோன், இ.மி.ச பொது முகாமையாளர் திருமதி. டபிள்யூ.கே.ஹேரத் உள்ளிட்ட இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று பங்குபற்றியது. 
 

தொடர்புடைய செய்திகள்