CEB


இ.மி.ச வின் புதிய துணை பொது முகாமையாளர் (தென் மாகாணம் 2) அலுவலகம் திறந்து வைக்கப்படுகிறது.


இ.மி.ச வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி, நம்பிக்கை மிக்க, பாதுகாப்பான, உடனடியான மற்றும் பயன்தகு சேவையினை வழங்கும் நோக்குடன் ஸ்தாபிக்கப்பட்ட புதிய துணை பொது முகாமையாளர் (தென் மாகாணம் 2) அலுவலகம் 2021 ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதி பொதுமக்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது.

 

இலங்கை மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர் (விநியோகப் பிரிவு 4) பொறியியலாளர் திரு. ரொஹான் செனெவிரத்ன அவர்களின் அழைப்பினை ஏற்று அச்சந்தர்ப்பத்திற்கு வருகை தந்த இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ஷ அவர்களின் கௌரவ பங்கேற்புடன், மின்வலு அமைச்சர் கௌரவ டலஸ் அலஹப்பெரும அவர்களின் தலைமையில் அலுவலகம் திறந்துவைக்கப்பட்டதுடன், இலங்கை மின்சார சபையின் தலைவர் பொறியியலாளர் திரு. விஜித்த ஹேரத் மற்றும் பொது முகாமையாளர் பொறியியலாளர் திருமதி. என். டபிள்யூ. கே. ஹேரத் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலர் இச்சந்தர்ப்பத்தின் போது பங்குபற்றினர்.

 

இல.61/1A, முஹ_து மாவத்தை, தங்காலை எனுமிடத்தில் அமைந்துள்ள புதிய துணை முகாமையாளர் (தென் மாகாணம் 2) அலுவலகத்தினால் மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களை மையமாகக் கொண்டு மாத்தறை, தங்காலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய இ.மி.ச பிரதேச அலுவலகங்களை உள்ளடக்கி செயற்படும் வகையில் 3,075 சதுரகிலோமீற்றர் நிலப்பரப்பில் பரந்து காணப்படும் 365,000 ஐ அண்மித்த வாடிக்கையாளர்களின் தேவைப்பாடுகளை உடனடியாக நிறைவேற்றிக் கொள்ள இயலும்.  

தொடர்புடைய செய்திகள்