இலங்கை மின்சார சபையூடாக நடைமுறைப்படுத்தப்படும் ப்ரோட்லன்ட்ஸ் நீர் மின் செயற்றிட்டத்தின் பிரதான சுரங்க பாதைக்கு நீர் நிரப்பும் ஆரம்ப வைபவம் கௌரவ பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (18) அலரி மாளிகையில் நிகழ்நிலை ஊடாக மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது மின்சக்தி அமைச்சின் கௌரவ காமினி லொக்குகே அவர்கள், நீதி அமைச்சர் கௌரவ அலி சப்ரி அவர்கள், சூரிய சக்தி, காற்றாலை மற்றும் நீர்மின் பிறப்பாக்கிச் செயற்றிட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ துமிந்த திஸாநாயக்க அவர்கள் உள்ளிட்ட அமைச்சர் குழு மற்றும் இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர், பொறியியலாளர் திரு.எம்.ஆர்.ரணதுங்க அவர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் குழுவொன்றும் பங்குபற்றியிருந்தது.