CEB

இலங்கையின் தகவல் உரிமைச் சட்டமானது (RIT Act ) ஒளிவு மறைவற்ற அரசாங்கம் ஒன்றினையும், ஆட்சி முறையில் நாட்டு மக்களின் பங்குபற்றலையும் மற்றும் நாட்டு மக்களிற்கு பொறுப்புக் கூறுகின்ற தன்மையையும் வெளிக்கொண்டு வரும் உறுதிப்பாட்டுடன் அமுலாகிறது.

 

ஊடகத்துறை மற்றும் பாராளுமன்ற புனரமைப்பு அமைச்சானது, தகவல் பெறும் உரிமையினை அமுல் படுத்தப்படலுக்குரிய அடித்தளத்தினை மக்கள் தொடர்பு அலுவலர்களிற்கு பயிற்சி மற்றும் பிரதான தகவல் அலுவலர் உள்ளிட்ட தரப்படுத்தப்பட்ட அலுவலர்களிற்கான  பதவிநியமனங்களை வழங்கி  செயற்பாடுகள் பல மேற்கொள்கிறது.

 

இவ் அமைச்சானது தகவல் பெறும் உரிமை ஆணைக்குழுவுடன் நெருக்கமாகக் கடமை புரிவதாக குறிப்பிட்டுள்ளது.  இச்சட்டத்தின் மூலம் இந்த ஆணைக்குழுவிற்கு மேன்முறையீடு விசாரித்தல், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல்,  மற்றும் தரவு முகாமைத்துவம் மற்றும் உயிர்ப்பான வெளிக்காட்டல்களுக்கான கட்டளையிடும் வழிகாட்டல்களை வழங்குதல் போன்ற பாரிய வல்லமைகள் அளிக்கப்பட்டுள்ளது.

 

முன்னேற்றம் கொண்ட இச்சட்டக் கட்டமைப்பு இருந்தபோதிலும்,  அனுபவிக்கப்படக்கூடிய உரிமைகள் மற்றும் பயன்படுத்தப்படும் முறை தொடர்பாக மக்கள் போதிய தெளிவு பெறாது இருப்பதாகவும் இலங்கையின் வெளிப்படைத்தன்மைக்கான சர்வதேச நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

 

மேலும் அந் நிறுவனம் குறிப்பிடுகையில், இந்த உரிமையினூடாக அதன் உண்மைத்தன்மையினை அனுபவித்து, அன்றாட கடமைகளின் போது அதனை ஒரு ஊடகமாகப் பயன்படுத்தும் தன்மைதொடர்பாக மக்கள் மீது பொறுப்புவாய்ந்தவர்கள் கவனிக்கவில்லை.

 

தகவல் பெறும் உரிமை தொடர்பாக இலகுவான முறையிலும் தெளிவாகவும் மக்களுக்கு அறியப்படுத்துதல் அரசினால் மேற்கொள்ள வேண்டிய தலையாய பொறுப்பொன்றாகும்.

 

தகவல் உரிமைச் சட்டமானது பல வழிகளில் தனித்துவமானதாகும். ஏதேனும் முரண்பாடுகள் காணப்படுமிடத்து தகவல்கள் வெளிக்கொணரப்படுவதன் காரணமாக பாரியதொரு மக்கள் சேவை இடம்பெறுமாயின், இச்சட்டமானது எழுத்து மூலமான ஏனைய சட்டங்களை ரத்துச்செய்து முன் நிற்பதுடன், விபரங்களை வெளிக்கொண்டு வரும் ஆற்றலும் காணப்படுகின்றது.

 

சட்டத்தின் மூலம் கோரப்படுகின்ற தகவல், சட்டத்தினால் பாதுகாக்கப்பட வேண்டிய அல்லது ஏதேனும் விசேடத்துமுடைய விடயமாகும்போதும் கூட, தகவல் உரிமை சட்டம் செல்லுபடியாகும் நிலையிலேயே காணப்படுகின்றது.

 

வெளிப்படைத்தன்மைக்கான சர்வதேச  நிறுவனம், மக்கள் ஆர்வமுடைய ஒளிவு மறைவற்ற அரசமைப்பிற்கான, சனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டவர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் விபரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அதிகாரிகளிடம் கோரிக்கைகளை முன் வைத்து நிறைவு செய்கிறது.

 

அரச அதிகாரிகள் கோரிக்கைகள் கிடைக்கப் பெற்று அது தொடர்பாக உரிய காலப்பகுதிக்குள் ( ஆகக்கூடியது 28 நாட்கள்) பதில் வழங்க வேண்டிய கடப்பாடு காணப்படுகின்றது.

 

இலங்கை தகவல் பெறும் உரிமை ஆணைக்குழுவிற்கு பாரிய வல்லமைகள் காணப்படுவதுடன், அதில் முக்கிய பொறுப்பாகக் காணப்படுவது நாட்டின் எந்ததொரு குடிமகனுக்கும் தகவல் பெறும் உரிமை இடையூறு இல்லாது அனுபவிக்கக் கூடியதை  உறுதிப்படுத்துவதாகும்.

 

ஆணைக்குழுவின் கட்டமைப்பினை நோக்கும் போது,  அது அரசியலைப்பு, பொது நிர்வாகம், சமூக சேவை, ஊடகத்துறை, விஞ்ஞானத் தொழில் நுட்ப அல்லது முகாமைத்துவம் போன்ற பிரிவுகளல் அறிவு, அனுபவம் மற்றும் நிபுணத்துவம் கொண்ட 5 உறுப்பினர்களை கொண்டுள்ளது.

 

தகவல் பெறும் ஆணைக்குழுவின் தற்போதைய உறுப்பினர்கள் - மஹிந்த கம்மன்பில, கிஷாலி பின்ரோ ஜயவர்த்தன, எஸ். ஜி. புஞ்சிஹேவா , நீதிபதி. ஏ.டபிள்யு. ஏ. சலாம், மற்றும கலாநிதி செல்வி திருச்சந்திரன்

 

உரிய வர்த்தமானி அறிவித்தலின் படி, தகவல் உரிமைச் சட்டமானது கீழுள்ள பொதுமக்களுடன் தொடரபான அதிகாரிகளிற்கு அமுலாக்கப்படுகிறது.

 

(அ) அரசாங்க அமைச்சுகள்

(ஆ) அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் அல்லது  அரசியல் அமைப்புச் சட்டத்தின்  மூலம் அல்லது மாகாண சபையொன்றின் சாசனம் அல்லது (உ) வில் குறிப்பிடப்பட்டுள்ளவை தவிர்ந்த, 2007 ஆம் ஆண்டு 7 ஆம் இலக்க கம்பெனிச்சட்டம் தவிர்ந்த ஏதேனும் ஒரு எழுத்திலான சட்டம் மூலம் உருவாக்கப்பட்ட ஏதேனும் ஒரு சபை அல்லது அலுவலகம்.

(இ) அரச திணைக்களங்கள்

(ஈ) அரச கூட்டுத்தாபனங்கள்

(உ) அரச அல்லது அரச கூட்டுத்தாபனம் அல்லது அரசும் அரச கூட்டுத்தாபனமும் இணைந்து இருபத்தைந்து சதவீத அல்லது அதற்குக் மேற்பட்ட பங்குகளை உடைய அல்லது வேறு நிர்வாக உரித்துக் கொண்ட 2007 ஆம் ஆண்டு 7 ஆம் இலக்க கம்பெனிகள் சட்டத்தினால் ஸ்தாபிக்கப்பட்டதொரு கம்பெனி.

(ஊ) உள்ளூராட்சி நிறுவனம்

(எ) ஒப்பந்தம் அடிப்படையில், கூட்டாக, அரசாங்கம் அல்லது அதன் முகவர் நிறுவன அல்லது உள்ளுராட்சி நிர்வாக சபையொன்றின் ஒப்பந்தம் அல்லது அனுமதிப் பத்திரத்தின் கீழ் சட்டரீதியான அல்லது பொது தொழிற்பாட்டினை அல்லது சேவைகளை மேற்கொள்ளும் ஒரு தனியார் நிறுவனம் அல்லது அமைப்பு. ஆனால் அதன் தொழிற்பாடானது சட்டரீதியான அல்லது பொது தொழிற்பாடு அல்லது சேவை வரை எல்லைப்படுத்தப்பட்டுள்ளது

(ஏ) மாகாண சபை ஒன்றினால் உருவாக்கப்பட்ட ஏதேனும் ஒரு திணைக்களம் அல்லது அதிகார சபை, அல்லது நிறுவனம்

(ஐ) மக்களுக்கு வழங்கப்படுகின்ற சேவை தொடர்பான தகவல்களை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கின்ற சேவை புரிகின்ற, அரசாங்கத்தினால்  அல்லது ஏதேனும் ஒரு திணைக்களத்தினால் அல்லது மாகாண சபையினால் உருவாக்கப்பட்ட அதிகாரசபையினால் அல்லது வெளிநாடொன்றினால் அல்லது சர்வதேச அமைப்பினால் நிதி வழங்கப்படுகின்ற அரச சார்பற்ற நிறுவனம்.

(ஒ) ஏதேனும் ஒரு எழுத்து மூலமான சட்டத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட அல்லது அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்ட அல்லது அரசாங்கத்தினால் அல்லது அரச கூட்டுத்தாபனத்தினால் அல்லது மாகாண சபையினால் உருவாக்கப்பட்ட சட்டவாக்க சபையினால் முழுவதுமாக அல்லது பகுதியான நிதியுதவியில் இயங்குகின்ற தனியார் பல்கலைக்கழகம் மற்றும் தொழில்முறை நிறுவனம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்கள்.

(ஓ) ஏதேனும் ஒரு எழுத்து மூலமான சட்டத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட அல்லது அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்ட அல்லது அரசாங்கத்தினால் அல்லது அரச கூட்டுத்தாபனத்தினால் அல்லது மாகாண சபையினால் உருவாக்கப்பட்ட சட்டவாக்க சபையினால் முழுவதுமாக அல்லது பகுதியான நிதியுதவியில் இயங்குகின்றதொழில்முறைக்கல்வி அல்லது தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் உள்ளிட்ட தனியார் கல்வி நிறுவனங்கள்.

(ஔ) நீதித்துறை நிர்வாகத்தின் கீழ் உருவாக்கப்பட்ட நீதிமன்றங்களும், நியாய சபைகளும் மற்றும் நிறுவனங்களும்.

 

தகவல் பெறும் உரிமைபற்றிய சட்டத்தின் மூலமாக தகவல் பெறும் செயற்பாடு

தகவல் பெறும் உரிமை பற்றிய செயற்பாடு தொடர்பான விளக்கப்படம்

RTIWPROCESSweb