CEB | Business With CEB


இலங்கை மின்சார சபை புத்தாக்கப் போட்டித் தொடர் 2020


இலங்கை மின்சார சபையின் அபிவிருத்தி கருதி புத்தாக்கங்களுக்கு வழிகோளும் ஊழியர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் நடாத்தப்படுகின்ற புத்தாக்கப் போட்டித் தொடரின் 2020 வருடத்திற்கான பரிசளிப்பு வைபவம் கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த அரும்பொருட்காட்சி மண்டபத்தில் சுகாதார அறிவுரைகளுக்கு அமைவாக மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதான அதிதியாக மின்வலு அமைச்சர் கௌரவ டளஸ் அளஹப்பெரும அவர்கள் கலந்து கொண்டதுடன், மின்வலு அமைச்சினது செயலாளர் திருமதி வசந்தா பெரேரா, இலங்கை மின்சார சபையின் தலைவர் பொறியியலாளர் திரு. விஜித ஹேரத், இலங்கை மின்சார சபையின் பொதுமுகாமையாளர் பொறியியலாளர் திருமதி என். டப். குமுதினி ஹேரத் உள்ளிட்ட இலங்கை மின்சார சபையினது சிரேஷ்ட அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

2020 புத்தாக்கப் போட்டித் தொடரின் போது சிறந்த குழுவினை முன்னிறுத்துவது தொடர்பாக இரண்டு வெள்ளி விருதுகளைப் பெற்றுக்கொள்வதற்கு இரு குழுக்கள் தகைமை பெற்றுக்கொண்டன. பொறியியலாளர் சி. பி. விக்ரமசிங்க மற்றும் கலாநிதி கபில பண்டார ஆகியோர் ஒரு வெள்ளி விருதினை வென்றெடுத்ததுடன், பி. எச். வணிகசிங்ஹ, ஜி. ஆர். பி. சந்திமா மற்றும் சி. யு. பண்டார குழுவினர் மற்றைய வெள்ளி விருதினை உரித்தாக்கிக்கொண்டனர்.  அதே தரத்தில் வெண்கல விருதொன்றும் மற்றும் திறமைக்கான ஆறு விருதுகளும் வழங்கப்பட்டதுடன், போட்டியில் பங்குபற்றலை பாராட்டும் விதமாக அதற்கான சான்றிதழ்கள் பதினைந்தும் பின்னர் வழங்கப்படவுள்ளன.

2020 புத்தாக்க போட்டித் தொடரில் சிறந்த தனி நபர் புத்தாக்கக் குழுவிற்கான வெண்கல விருதுகள் இரண்டு வழங்கப்பட்டதுடன், எஸ். எம். நிமல் சமரகோன் மற்றும் எச். ஆர். நிமலசூரிய ஆகிய ஊழியர்கள் அந்த இரு விருதுகளையும் தனதாக்கிக் கொண்டனர். அதே தரத்தில் திறமைக்கான விருதுகள் 8 வழங்கப்பட்டதுடன், போட்டியில் பங்குகொண்டமையினைப் பாராட்டி 11 சான்றிதழ்கள் பின்னர் வழங்கப்படுவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

வெற்றி பெற்றவர்களுக்கான பணப் பரிசு வழங்குதல் பரிசளிப்பு வைபவத்தின் போது இடம் பெற்றதுடன், அவர்களது கடமை நிலையங்களுக்கு பணப்பரிசு வழங்குதல் பின்னர் மேற்கொள்ளப்படுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்