இலங்கை மின்சார சபை, தேசிய கரப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் 2021 ஐ வென்றது


இலங்கை கரப்பந்தாட்ட கூட்டமைப்பு ஏற்பாடு செய்த வருடாந்த தேசிய கரப்பந்தாட்ட சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியானது அண்மையில் மகரகம இளைஞர் சேவைகள் உள்ளக விளையாட்டரங்கில் இ.மி.ச. தேசிய கரப்பந்தாட்ட அணிக்கும் பிட்லிங்க் கரப்பந்தாட்ட அணிக்கும் இடையே நடைபெற்றது. விறுவிறுப்பான போட்டியின் பின்னர், இ.மி.ச. அணியானது பிட்லிங்க் அணியை தோற்கடித்து தேசிய கரப்பந்தாட்ட சாம்பியன்ஷிப்பை வென்றது.


மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர், திரு கௌரவ டலஸ் அழகப்பெருமா, இலங்கை மின்சார சபை தலைவர் திரு. விஜித்த ஹேரத், இலங்கை மின்சார சபை துணைத் தலைவர் திரு என். எஸ். இலங்ககூன், இலங்கை மின்சார சபை பொது முகாமையாளர் பொறியியலாளர் திருமதி என். டபிள்யு. கே. ஹேரத், இ.மி.ச. விளையாட்டுக்கழக துணைத்தலைவர் பொறியியலாளர் திரு கே. கே. எஸ். டிசானாயக்க (மேலதிக பொது முகாமையாளர் – சொத்து முகாமைத்துவம்) மற்றும் பொது செயலாளர் திரு. ஜே. எம். டி. விஜேவீர (மேலதிக நிதி முகாமையாளர் – விநியோகப்பிரிபு 1) மற்றும் பல இ.மி.ச. மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்