CEB | Business With CEB


2022 ஆம் புது வருடத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.


இலங்கை மின்சார சபையின் தலைமையகத்தில் 2022 ஆம் புது வருடத்தின் பனிகளின் ஆரம்பம் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 03 ஆம் திகதி திங்கட் கிழமை இடம் பெற்றது.

 

கொவிட் 19  தொற்று நோய் காரணமாக பணியாளர்களின் சுகாதாரப் பாதுகாப்பினை உறுதி செய்தல் மற்றும்  பொது மக்கள் ஒன்று கூடுவதை குறைத்துக் கொள்ள வேண்டியிருந்ததால் அது தொடர்பிலான அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

 

மத அனுஸ்ட்டானங்கள் இடம்பெற்றதன் பின்னர் புதுவருட பணிகளின் ஆரம்பத்தை அடையாளப்படுத்தி தேசிய கொடியானது இமிசவின் தலைவர் திரு. எம்.எம்.சீ. பெர்டினாண்டோ மற்றும் இமிச வின் கொடியானது  பொது முகாமையாளரான பொறியியலாளர் திரு. எம்.ஆர். ரணதுங்க மற்றும் நிதி முகாமையாளரான திரு. ரீ.கே. லியனகே ஆகியோரின் கரங்களால் ஏற்றப்பட்டன.

 

அதன்பின்னர் தேசிய கீதம் மற்றும் இமிச வின் கீதம் இசைக்கப்பட்டதுடன், இந் நிகழ்வில் இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்றும் கலந்து கொண்டிருந்தது. மேலும், நாடு முழுவதிலுமுள்ள சகல இமிச பிரிவுகளின்/ கிளைகளின்/ அலகுகளின் தலைவர்களது தலைமையில் அவ்வலுவலக வளாகங்களுக்குள் அரச சேவை உறுதியுரை/ சத்தியத்தை செய்து கொள்வதற்காக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

தொடர்புடைய செய்திகள்